பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஸெட்டி

மலையின் மேல்

இந்தப் பாதை இறுதிவரை
மலையைச் சுற்றிச் சுற்றித் தானா? -
ஆம், இறுதிவரை அவ்விதம்தான்.

II


இந்தப் பிரயாணத்துக்கு
இன்று முழுவதும் செல்லுமா? -
ஆம், காலைமுதல் இரவுவரை ஆகும்.

III


இரவு ஓய்வுகொள்ள இடம் உண்டா? -
ஆம், நீண்ட இரவில் தங்க வீடு உண்டு.

IV


அந்த வீட்டை இருள் மறைத்துவிடாதா? -
இல்லை, நீ அதைக் காணாதிருக்க முடியாது.

V


இரவில் வேறு வழிப்போக்கரைச் சந்திப்பேனா?
ஆம், உனக்கு முன் போனவர்களை.

59