பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தூக்கமின்றிச் சோர்ந்துபோன கண்கள்
சிவந்த மலரும் வெளுத்துத் தோன்றும்.
பூமிக்கடியில், நிலக்கரிக் கனியில்,
நாள்முழுதும் சுமந்து சுமந்து அலுத்தோம்,
ஆலைகளில் இரும்புச் சக்கரங்களை
நாள் முழுதும் சுற்றிச்சுற்றி அலுத்தோம்

VI


'நாள் முழுதும் சக்கரங்கள் சுற்றிக்கோண்டேயிருக்கும்.
நாள் முழுதும் சத்தம் - ஒரே இரைச்சல்.
சுழலும்பொழுது காற்று முகத்தில் வீசும்;
இதயம் பதறும் - நாடி துடிக்கும்,
தலை சுழலும், அதனால் சுவரும் சுழலும்,
கைக்கெட்டாத ஜன்னலில் காணும் வானமும் சுழலும்,


சுவரில் விழும் நீண்ட ஒளியும் சுழலும்,
எல்லாம் சுழலும், நாங்களும் சுழல்வோம்,
நாள் முழுவதும் ஒரே சுழற்சி, ஒரே இரைச்சல்!
சில சமயம் எங்களை அறியாமலே,
"சக்கரங்களே ! இன்றேனும் நில்லுங்களேன்!"
என்று நாங்கள் வேண்டுவோம்.'

VII


'அனைவர்க்கும் ஆசீர்வாதம் அருளும் ஆண்டவன்
உங்களுக்கும் மறுமையில் அருள்வான், மயங்காதீர்

61