பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கைகள் - கழுத்து - காசா - தையல்!
காசா - கழுத்து - கைகள் - தையல் !
பொத்தான் தைக்கிறேன் - தூங்கி விழுகிறேன்,
கனவிற் போலவே பொத்தான் தைக்கிறேன் !

IV


சகோதரிகளோடு பிறந்தவர்களே!
தாய்மா ருடையவர்களே!
மனைவிமாரை மணந்தவர்களே!
நீங்கள் அணிந்துபோவது ஷர்ட்டல்ல -
மனிதர் வாழ்வேயாம்! - ஆயினும் என்ன?
தையல் - தையல் - தையல்!
வயிற்றில் பசி - மேனியில் தூசி,
இரட்டை நூல் கொண்டு தைப்பதென்ன?
சவத் துணியா? - ஷர்ட்டா?

V


மரணமா - அந்தப் பயங்கர எலும்புருவா?
அதைப் பற்றி என்ன பேச்சு? - அதைப் பற்றி என்ன பயம்?
பட்டினி கிடந்து, பட்டினி கிடந்து,
எனது உருவம் எலும்புக் கூடுதான்.
ஐயோ, கடவுளே! ஏன் உணவு
இவ்வளவு கிராக்கி?
ஏன் மனிதத் தசையும் இரத்தமும்
இவ்வளவு மலிவு?

69