பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

debt

129

decibel



debt (n) - கடன்,கடமை,பொறுப்பு. debtor (n) -கடனாளி. debtor ledger adjustment account கடனாளிப் பேரேட்டுச் சரிக்கட்டுக்கணக்கு. ஒ. creditor.
debug. (v) - பிழை நீக்கு (கணிப் பொறி), மறைந்துள்ள 'ஒலி பெருக்கிகளை நீக்கு.
debunk(v). தகுதி இல்லை எனக்காட்டு.
debut (n) - முதல் தோற்றம்,அரங்கேற்றம்.
debutante (n) - அரங்கேறும் நங்கை.
decade (n) - பத்தாண்டு.
decadence (n) - நலிவு,சோர்வு,தளர்ச்சி. decadent (a) - நலிவுறும்.
decagon (n) - பதின்கோணம்.
decalcify (v) - சுண்ணம் நீக்கு.
Decalogue (n) - பத்துக் கட்டளைகள் (விவிலியம்).
decamp (v) - கலைந்து செல்.
decant (v)- தெளியவைத்து இறு,வடி. dancantation (n) - வடித்தல்.decanter (n)- வடிக்கட்டி.
decapitate (v) - தலையை வெட்டு. decapitation (n.) - தலையை வெட்டல்:
decarbonize (v) - கரியை நீக்கு.
decathlon (n) - பதின் நிகழ்ச்சிப் போட்டி.
decathlete (n)- பதின் நிகழ்ச்சிப் போட்டியாளர்.


decay (V) - அழுகு,சிதை.(n) -அழுகுதல் , சிதைதல்.
decease (n) - இறப்பு.deceased (a) - இறந்த.the deceased - இறந்தவர்.
deceit (n) - ஏமாற்றல், நேர்மையற்ற கூற்று, செயல். deceitful (a) deceitfully (adv) deceive (v) - ஏமாற்று. deceiver (n) - ஏமாற்றுபவர்.
decelerate (v) - மெதுவாக்கு, எதிர்முடுக்கங் கொள்ளச் செய். deceleration (n) - மெதுவாக்கல், எதிர்முடுக்கம். (x accelerate)
December (n) - திசம்பர் திங்கள். decency (n) - நாகரிக நடத்தை. the decencies - சமூக நாகரிக நடத்தைகள். decent (a)- நாகரிக நடத்தையுள்ள. decently (adv).
decennial (a)-பத்தாண்டுக்கு ஒரு முறை நிகழும்.
decentralize (v) - பரவலாக்கு. decentralization (n) - பரவலாக்கல்.(X centralization).
deception (n) - ஏமாற்றல்,ஏமாற்றும் தந்திரம். deceptive (a) - ஏமாற்றும். deceptively (adv)
decibel (n)- டெசிபல்: ஒலி உரப்பு அலகு.