பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

adverb

10

aeroplane


adverb (n) - வினையடை, adverbial (a) adverbially (adv).

adversary (n) - எதிரி,பகைவர்.

adverse (a) - எதிரான,பகையான, இன்னாக்குறிப்பு. adversely (adv), adversity (n) - துன்பம், இன்னல்.

advert (v) - கவனத்தைக் திருப்பு, பார்க்க, விளம்பரம் செய். advertence (n), advertent (a).

advertise (V) - விளம்பரஞ்செய், ஊக்குவி, விரும்பிக்கேள்.

advertisement (n)- விளம்பரம்.advertiser (n) - விளம்பரதாரர் . advertising (n) - விளம்பரம் செய்தல். advertising revenue:விளம்பர வருவாய்.

advice (n) - அறிவுரை, அறிவிப்பு advice note- அறிவிப்புக் குறிப்பு , advices (n)- செய்தி, தகவல.

advisable {a) - பரிந்துரைக்குரிய advisability (n)- பரிந்துரைப்பு,

advise (v) - அறிவுரை கூறு,அறிவி,தெரிவி. advisedly (adv) - adviser (n)-அறிவுரையாளர். educational adviser : கல்வி அறிவுரையாளர்.

advisory committee :அறிவுக் குழு.

advocate (v) - பரிந்துரை,பரிந்து பேசு, ஆதரி.

advocate (n)- வழக்குரைஞர்,பரிந்து பேசுபவர்.

advocacy - பரிந்து பேசல், வழக்குரைத்தல்.ஒ. barrister, Solicitor.


advocate general - அரசுத் தலைமை வழக்குரைஞர்.

adze (n) - மரஞ்செதுக்கி,வாய்ச்சி.

aegis (n) - ஆதரவு, பொறுப்பு,சார்பு, under the aegis of. ஆதரவில்.

aeon (n) - ஊழி(க்காலம்) பா. age, era,period.

aerate (v) - காற்றூட்டு, கரி இரு வளி சேர் . aerated water - கரி இரு வளி சேர்ந்த நீர், காற்றூட்டிய நீர்.

aeration (n) - காற்றோட்டம்

aerial, antenna (n) - அலை வாங்கி, aerial (a)- காற்று சார், வானூர்திசார், வான, aerial photography: வானப் படப் பிடிப்பு.

aerial roots- காற்று வேர்கள்.

aerobatics (n) - வானூர்தித் திற விளையாட்டு. aerobatic (a).

aerobics (n) - மூச்சுப் பயிற்சி.

aerodrome (a) - வானத் தளம்.

aerodynamics (n) - வானூர்தி விசை இயல். aerodynamic (a).

aeronautics (n) - வானூர்தி இயல், வானூர்தி பறக்குங்கலை.

aeronautic (a), aeronautical engineering : வானூர்திப் பொறியியல், வானக் கலப் பொறி இயல்.ஒ. automobile engineering, aeronaut (n) - வான வலவர், விமானி.

aeroplane (n) - வானூர்தி