பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

elementary

171

еmапсipate




elementary (a) - தொடக்க. elementary School-தொடக்க நிலைப்புள்ளி, அடிப்படையான. elementary mathematics-அடிப்படைக் கணக்கு.
elementary particle (n) - அடிப்படைத்துகள், மின்னணு, முன்னணு, அல்லணு.
elephant (n)- யானை.elephantine (a)- பெரியதும் அருவருப்பும் உள்ளதுமான. elephantiasis (n) - யானைக்கால் நோய்.
elevate (v) - உயர்த்து,மேன்மையுறச் செய். elevation (n) - உயர்த்துதல்,உயரம்,மேடு (a)-நேர்த்தியான, பெருந்தன்மையுள்ள. elevated railway - உயர இருப்பு வழி.
elixir (n)-அருமருந்து,அமிழ்தம் சஞ்சீவி.
elk (n) - மான்வகை.
ellipse (n) - முட்டை வடிவம்,நீள்வட்ட வடிவம் elliptic (a).elliptic orbit - நீள்வட்ட வழி.(கோள்,செயற்கை நிலா).
ellipsis(n)-தொக்கி நிற்றல்,அவாய்நிலை. elliptical (a). elliptically (adv).
elm (n) - இலையுதிர்மரம்.
elocution (n) - சொற்பொழிவுக் கலை,பேச்சுக் கலை.elocution lessons பேச்சுக் கலைப் பாடங்கள்.elocutionist (a) - பேச்சுக் கலைஞர்.

elongate - நீளச்செய்.elongation (n)-நீட்சி. elongated (a) - நீட்டித்த. elongated Course - நீட்டித்த படிப்பு. (x truncated).
elope (v) - ஓடிப்போ (காதலி ). elopement (n) - உடன்போக்கு.
eloquence (n) - சொல்வன்மை,நாவன்மை. eloquent (a) - நாவன்மையுள்ள. eloquently (adv).
else (adv) - தவிர,மேலும் elsewhere (adv) - வேறோரிடத்தில்,
elucidate (v) - விளக்கிச்சொல்.eluclidation (n) - விளக்கிச் சொல்லல்.
elude (v) - தப்பு,தவிர். elusive(a)-தப்பும், தவிர்க்கும்.elusive reply- தவிர்க்கும் மறுமொழி. elusion (n) - தவிர்த்தல்.
elver (n) - இளம் பாம்பு போன்ற மீன்.
Elysium (n) - பேரின்ப உலகம்,துறக்கம்.
em - எம் அளவு(அச்சுத்தொழில்)1/6அங்குலம்.
emaciate (v) - மெலியச் செய்.emaciation (n) - மெலிதல், நலிதல்.
emanate (v) - வெளிப்படு,தோன்று.emanation (n) - தோன்றல்,வெளிப்படல்.
emancipate (V) - விடுதலை செய்.emancipation (n) - விடுதலை செய்தல்.