பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

epee

180

equanimity



epee (n) - கூரிய முனைவாள்
ephemera (n) - குறுங்கால நுகர் பொருள்கள். ephemeral (a) - நிலைத்திலா, நிலையிலாப் பொருள். (x eternal)
epic (n) - காப்பியம், காவியம், பெருங்கதை. வீரதீரப்படம், வீரச்செயல் (a) பெருமித, விழுமிய,வீரஞ்செறிந்த,
epicardium (n)- இதய மேலுறை ஒ.endocardium.
epicarp(n)- கனிமேலுறை, தோல்
epicene (n) - ஆண் பெண் பொதுப்பால் (இலக்கணம்)
epicentre (n)- மேல் மையம்,மையம் (நில நடுக்கம்).
epicure (n) - இன்ப விரும்பி. epicurean (3, n) - இன்பப் பொருள் விரும்பி.
epidemic (n) - கொள்ளை நோய் (காலரா), விரைந்து பரவும் நோய்.ஒ. endemic, pandemic.
epidermis (n) - மேல் (புறத்) தொல் ஒ. endodermis.
epiglottis (n) - குரல்வளை மூடி.
epigram (n) - செறிமொழி.நயமொழி. epigrammatic (a) - நயமாகத் தெரிவதாகும்.
epigraph (n) - கல்வெட்டு,வரைவு,பொறிப்பு, epigraphy (n) - கல்வெட்டுத்துறை.
epilepsy (n) - வலிப்பு நோய்.epileptic (a).
epilogue (n)- புறவுரை,பின்னுரை.
epiphany (n) - இயேசுபெருமானின் இறைத் தோற்றம்.

180

equanimity

episcopal (a) - பேராயர் ஆட்சிக்குட்பட்ட
episode (n) - தொடர் பகுதி,கதைத் தொடர். episodic (a) - ஒழுங்கற்றுத் தோன்றும்.
epistemology (n) - அறிவுவகை இயல்.
epistle (n)- கடிதம், முடங்கல் epistolary (a)- கடிதம் சார்.
epitaph (n) - கல்லறை வாசகம்.
epithet (n) - இடுபெயர்,அடைமொழி, எ.கா: அறிஞர் அண்ணா. தந்தை பெரியார்.
epitome (n)- சுருக்கம், சிறந்த எடுத்துக்காட்டு. epitomize (v) - சுருக்கிக் கூறு.
epoch (n) - ஊழி, திருப்புமுனை epoch-making (a) - குறிப்பிடத்தக்க
epopee (n) - காப்பியச்செய்யுள்.
Epsom salts -மக்னீசியச் சல்பேட், பேதி மருந்து,
equable (a) - சீரான (வெப்பமோ குளிரோ இல்லாத) சமநிலையுள்ள.equably (adv)
equal (a) - சமமான(அளவு,மதிப்பு, எண், நிலை, equal(n) - நிகரானவர், நிகர். equal (V) - சமமாக இரு. 4+2=6 equally (adv) - சமமாக.
equality (n) - சமநிலை,ஒப்பு,நிகர்நிலை.
equalize (v) - சமமாக்கு.equalization (n) - சமமாக்கல்.
equanimity (n) - அனுமதி,உளச்சமநிலை.