பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fortune

224

foundry



fortune (n) - நற்காலம், நற்பேறு,பேரளவு செல்வம். fortunate (a) - நற்பேறுடைய. fortunately (adv). fortune hunter (n) - ஆதாயந்தேடி, (பணத்திற்காக மணப்பவர்). fortune teller (n) - நற்காலம் (எதிர் காலம்) பற்றி உரைப்பவர்.
forty (n)- நாற்பது.40.
forum (n) - பொது மன்றம்,அரங்கம், மேடை.
forward (a, adv) - முன்னோக்கி,நன்கு வளர்ந்துள்ள (பயிர்கள்), எதிர்காலத்திற்குரிய, ஆர்வமுள்ள.
forward (v)- அனுப்பு, முன்னேற உதவு. forward-looking (a) - எதிர்காலம் பற்றிய, முன்னேற்றமுள்ள.
forward. (n) - முன்னோக்கி ஆடுபவர் (காற்பந்து). ஒ.striker.
forwarding address (n)- அனுப்பும் முகவரி. forwarding agent (n)- அனுப்பும் முகவர். for- warding charges (n) - அனுப்பும் செலவுகள்.
fossil (n) - தொல்படிவம், புதை படிவம், பத்தாம்பசலி.fossilize (v} - தொல் படிவமாக்கு, காலத்துக்குப் புறம்பாக இரு. fossilization (n) - தொல்படிவமாக்கல்.fossil fuel (n) - தொல்படிவ எரிபொருள்: நிலக்கரி.
foster (v) - வளர்,ஊக்கமளி.foster SOn - வள்ர்ப்பு மகன்.

224

foundry

foul(a)-கெட்டமணம், தீச்சுவையுள்ள, இனிமையற்ற, இழி மொழியான, காற்றும் மழையுமுள்ள, நேர்மையற்ற, விதிக்குப் புறம்பான (x fair).
foul (n) - விதி முரண் செயல். foul (v)- அழுக்காக்கு, திருகு, விதியை மீறிச்செய். foul-up (n) - உறவைக் கெடுத்தல். foul-mouthed (a) - தீயச் சொற்கள் பேசும்.
found (v) - நிறுவு, நிலைநாட்டு, கட்டத் தொடங்கு, அமை,உருக்கி ஊற்று.founding father, founder (n) - வகுத்தவர், அமைத்தவர்.
foundation (n) - நிறுவுதல்,அமைத்தல், அமைப்பு, நிறுவனம், கால்கோள், அடிப்படை. foundation cream (n) - முதல் தடவு பசை (ஒப்பனை). foundation course (n) - அடிப்படைப் படிப்பு.foundation stone (n) - கால் கோள் கல். founder (n) - நிறுவுநர்.founder's day- நிறுவநர் நாள்.founder member - நிறுவு உறுப்பினர்.
founder (V) - தவறு,குலை,அமிழ், தடுமாறிவிழு.
foundling (n) - கைவிடப்பட்ட குழந்தை.
foundry (n) - வார்ப்புத் தொழிற்சாலை.type foundry - அச்சு வார்ப்புத் தொழிற்சாலை.