பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hocus-pocus

275

homage



hocus-pocus (n) - ஏமாற்று வேலை.
hod (n) - தூக்குபெட்டி (கல்,நிலக்கரி).
hodge - podge (n) - கூட்டு கலவை.
hoe (n) - மண்வெட்டி, களைக்கொட்டு (V) - கொத்து.
hog (n) - பன்றி,தன்னலமுள்ளவன்.hoggish (a) - தன்னலமுள்ள. hog-wash (n)மடமை.
hogshead (n) - பீப்பாய்.
hoist (V) - உயர்த்து,ஏற்று.(n) - ஏற்றம்.
hold (V) - கையில் பிடி,தாங்கு (எடை), கட்டுப்படுத்து, குறிப்பிட்ட நிலையில் வை, பிடிப்பு உண்டாக்கு,எதிர்த்துப்போரிடு, தடுத்து நிறுத்தி வை, உரிமை கொள், பதவியிலிரு, கருது, நடத்து (கூட்டம்).
hold (n) - பிடிப்பு,பிடி, கட்டுப்பாடு, பிடிப்புப் பகுதி,கப்பல் உட்குழிவான பகுதி.
hold-all (n) - பயணப்பை.holder (n) - பிடிப்பவர்,வைத்திருப்பவன். holding (n) - சொத்து,நிலபுலம். holding Company(n) - உடைமை நிறுமம் (பங்குகள் அதிகமுள்ளது).
hole (n)- துளை,வளை,குழி(v)- hole and corner (n)- ஒளிமறைவு.

275

homage

holiday (n) - விடுமுறை.(v) - விடுமுறை எடு.().holiday camp (n) விடுமுறைத் தங்குமிடம், மனை. holiday maker (n - விடுமுறையில் இருப்பவர்.
holiness (n) - புனிதம்,திருத்தூய்மை, பட்டம் அருட்திரு, தவத்திரு.
holler (v) - கத்து.
hollow (a) - உட்குழிவான, குழிவிழுந்த, எதிரொலிக்கும், பொய்யான,உண்மையற்ற, பயனற்ற(n)- உட்குழிவு, குழிவு. (v)- உட்குழிவாக்கு, hollowly (adv).
holly (n) - பசுமைமாறாக் குற்றுமரம்.
holocaust (n) - பேரழிவு.the holocaust-யூதர்கள் நாசிகளால் பேரளவில் படுகொலை செய்யப்பட்டமை (இரண்டாம் உலகப் போருக்கு முன்னும் பின்னும்).
hologram (n) - நீளம்,அகலத்துடன் மூன்றாவது பரிமாணத்தையும் காட்டும் தோற்றம். holography (n) - holograph (n) - உரியவர் கையாலேயே முழுதும் எழுதப்பட்ட ஆவணம்.
holster (n)- கைத்துப்பாக்கித் தோலுறை.
holy (a)- சமய,கடவுள் தொடர்பான, புனிதமான. the holy Spirit- தூய ஆவி. Holy week - தூய கிழமை Holy Writ. தூய நூல்கள், திருமறைகள்.
homage (n) - வழிபாடு,புகழ் மாலை, மரியாதை செலுத்தல்.