பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

lab

336

lackator



lab - ஆய்வகம்,தொழிற்கட்சி (பிரிட்டன்).
label (n) - பெயர்ச்சீட்டு, முத்திரை (v) - ஒட்டு, முத்திரை பதி.
labia (a) - உதடு, labial (a) - உதடுசார், உதட்டால் ஒலிக்கும் ப்,ம், p,m. (n) - உதட்டொலி. labiate (a) - உதட்டு வடிவ (புல்லி வட்டம், அல்லி வட்டம்)
laboratory (n) - ஆய்வகம்.
laborious (a) - மிகு முயற்சி வேண்டும். laboriously (adv).
labour (n) - உழைப்பு, வேலை, தொழிலாளர், பேற்றுவலி. labour - தொழிற்கட்சி. a labour of Hercules - இமாலய முயற்சி. a labour of love - விருப்பத்துடன் செய்யும் வேலை labour camp - சிறைப் பாசறை. Labour Day - தொழிலாளர் நாள்(அமெரிக்கா) மே நாள் (உருசியா).
labour Exchange - வேலைத் தகவல் மையம்.
labour intensive - அதிகத் தொழிலாளர் வேண்டிய ஒ. capital intensive.
labour saving - வேலை குறைக்கும் (கருவி). labour union - தொழிலாளர் சங்கம், தொழிற்சங்கம்.
labour {v} - உழை, வேலை செய்கடினமாக).
laboured (a) - கடின,செயற்கையான (நடை.).
lahourer (n) - தொழிலாளி.


laburnum (n) - மஞ்சள் மலர்ச்செடி.
labyrinth (n) - ஏடாகோடமான பேர்வழி, கோடரம் (பொந்து). labrinthine (a).
lac (n) - அரக்கு, இலட்சம்.
lace (n) - கசவு, சரிகை, நாடா, வேலைப்பாட்டிழை நாண்,வடம் Shoe lace - புதைமிதி வடம், கயிறு. lace (v) - இழையில் வேலைப்பாடு செய்,சுவையூட்டு, தாக்கு.lace-ups - வடங்கோத்த புதைமிதி.
lacerate (v) - கீறு, புண்படுத்து. laceration (n) - கீறல்,புண்படுத்தல்.
lachrymal (a) - கண்ணீர் சார்.lachrymal glands - கண்ணீர்ச் சுரப்பிகள்.larchrymose (a) - அழும், வருந்தும்.
lack (v) - இல்லாமலிரு, ஒன்று தேவை. (n) - குறைவு, இல்லாமலிருத்தல், போதாமை. lack lustre - எழுச்சியற்ற, ஒளியிழந்த,
lackadaisical (a) - சோர்வுற்ற,வீறு இழந்த ஆரவமற்ற. lackadaisically (adv).
lackey (n) - குற்றேவலன்,வேலைக்காரன்.
laconic (a) - மணிச்சுருக்கமான, laconically (adv).
lacquer (n) - அரக்கெண்ணெய் (v) - அரக்கெண்ணெய் பூசு.
lactation (n)- பால் கரத்தல் lactic (a) - பால்சார். lactic acid - பால்காடி.lactometer - பால்மானி.lactose - பாலில் உள்ள சர்க்கரை.