பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/410

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mortal

404

mother country


mortal (a) - இறக்கும்,சாகும்,சாக வைக்கும், (காயம்), கொடிய, (பகைவன்) மருட்டும் (அச்சம்) (x immortal). mortal sin - இறையருள் இழக்கும் தீவினை mortal (n) - மனிதன், மாந்தன், mortally (adv).
mortality (n)- இறப்பு. mortality rate - இறப்பு வீதம். mortality table - வாழுங்கால அட்ட வனை (மனிதர்)
mortar(n) - உரல்,குழியம்மி,சுண்ணாம்புக் காரை, பீரங்கி, (v) - காரைபூசு.
mortar - board (n) - சதுர உச்சிக் கொண்ட குல்லாய் (கல்லூரி) காரைச் சாந்துத் தட்டு.
mortgage (n) - அடைமானம்,ஒற்றி. இதற்குரிய தொகை (v) mortgagee (n) - அடைமானம் ஏற்பவர். mortgager (n) - அடைமானம் வைப்பவர்.mortgage bond (n) - அடைமான பத்திரம் (முறி).
mortician (n) - வெட்டியான் ஒ.under-taker.
mortify (v) - வெட்கப்படச் செய்,ஆவி,அடக்கு. mortification (n) - வெட்கப்படச் செய்தல்.
mortise (n) - முனை பொரூத்து துளை. (V) - துளையில் முனையைப் பொருத்து ஒ. tenon, mortise lock - துளை பொருந்து பூட்டு

mother country -

mortmain (n) - கோயிலக மானியம்.
mortuary (n)- சவக் கிடங்கு,பிணவறை.
mosaic (n) - கோல அல்லது பட அமைப்பு, ஓவிய அமைப்பு (a) - ஒவிய அமைப்புள்ள.
mosque (a) -முசுலீம்கள் தொழும் பள்ளி வாசல்.
mosquito, mosquitoes (n) -கொசு.
moss (n)- மாசி ஒ.lichen, algae mossy (a) - மாசியால் மூடப்பட்ட, மாசி போன்ற, moss grown (a) - மாசியால் மூடப்பட்ட
most (adv) - (much, more most) - மீப்பெரும்பாலான, mostly (adv) - பெரும்பாலாக.
mote (n) - சிறுதுகள் (தூசி), துண.
motel (n) - ஊர்தியர் தங்கல் மனை.
motet (n) - திருச்சபை இசை(குரலுக்கு மட்டும்.)
moth (n) - அந்துப்பூச்சி. moth ball - அந்துருண்டை. moth - eater (a) -அந்து அரித்த moth-proof- அந்துப்பூச்சி அணுகாத
mother (n) - தாய்,அன்னை.mother (v) தாய் போல் பேணு, அன்புடன் நடத்து. Mother's Day - அன்னை நாள்.motherhood - தாய் நிலை. mother less- தாயற்ற.mother-like (a) - அன்னை போன்று motherly (adv).
mother country - தாய்நாடு.