பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/485

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

plexus

479

plumule


plexus (n) - வலைப் பின்னல்(குழாய், நரம்பு) பா. network.
pliable (a) - எளிதில் வளையக் கூடிய, கவரக் கூடிய (x rigid)
plight (n) - பரிதாபம், இரங்கத்தக்க நிலை, துயர்
Plimsoll line - பிளிம்சால் கோடு (கப்பல்).
plinth (n) - தூணின் பீடம் plinth area - பீடப் பரப்பு plinth beam- பீடத்தூன்.plinth-Wall - பீடச்சுவர்.
Pliocene (n) - பாலூட்டி வாழ். ஊழி (நிலவளரியல்)
plod (v) - மாடு போன்று உழை, தட்டுத் தடுமாறி நட, மெதுவாகச் செய். plodder (n) - மெதுக்கை, plodding (n) - மெதுவாகச் செய்தல்.
plonk (n) - கனமாக விழும் பொருள் ஒலி (v)- 'தொப்' என்று விழச் செய்.
plop (n) - மெதுவாக விழும் பொருள் ஒலி (V) - மெதுவாக விழச் செய்.
plosive (n) -வெடிப்பொலி (ஒலிப்பியல்).
plot (n) - மனை, சிறுநிலம், கதைக் கரு, சூழ்ச்சி.plotter (n) - சதிகாரர், சூழ்ச்சியாளர்.
plot (v) - குறி, படம் வரை,சதி செய்.
plough (n) - கலப்பை,உழு,படை. (V)- உழு.
plough man (n) - உழுபவர்,உழவர்.plough-share (n) - கொழு.
ploy (n) - திசை திருப்பல்.


plumule

pluck (v) - பறி, திரட்டு, கொய், இழு, மீட்டு (n) - நெஞ்சுரம், இழுப்பு. plucky (a) - pluckily (adv).
plug (n) - முளை, செருகி, அடைப்பான்(V)- அடை, செரு. plug-hole- செருகு துளை.
plum (n) - உலர்ந்த கொடி முந்திரிப்பழம், சதைக் கனி. plum pudding - பழப்பிட்டு.
plumage (n) - இறகுத் தொகுதி.
plumb (n)- குண்டு (adv)- துல்லியமாக, சரியாக (v)- குண்டு நூல் கொண்டு அள.
plumline (n) - குண்டு நூல். plumber (n) - குழாய்க் கம்மியர். plumbing (n) - குழாய் ஏற்பாடு, குழாய் வேலை.
plume (n)- இறகு.(V)- இறகைக் கோது, பெருமிதங் கொள். பாராட்டிக் கொள். plumed (a) - இறகால் அழகு செய்யப்பட்ட.
plummet (n) - தூக்கு நூல் குண்டு, ஆழம் பார்க்கும் குண்டு.
plummy (a)- நல்ல, விரும்பிய, வாயில் ஒன்றை வைத்துக் கொண்டு பேசும்.
plump (a) - சதைப் பற்றுள்ள, கொழுத்த (v) - சட்டென விழச் செய், போடு (n) - விழும் கன ஒலி. plumule (n) - சிறு இறகு,முளைக் குருத்து .ஒ. radicle.