பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/619

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

suffice

613

Sultry


suffice (V) - போதுமானதாயிரு,தேவைக்குச் சரியாயிரு. sufficient (a) - போதுமான sufficiency n.
suffix (n) - பின்னிணைப்பு விகுதி.(பா. prefix).
suffocate (v) - திணறடி,மூச்சு முட்டவை, திக்குமுக்காடச் செய், Suffocation n.
suffrage (n) - வாக்குரிமை,தேர்வுரிமை. n. suffragist, நிறைவாக்குரிமைவாதி, பெண் வாக்குரிமை கோருபவர். women's suffrage n. பெண்டிர் வாக்குரிமைப் பேறு, மாதர் வாக்குரிமை, universal Suffrage, அனைவர் வாக்குரிமை, மன்பதை வாக்குரிமை.
suffuse (v) - (நிறம்,ஈரம்,முதலியன) நன்கு பரவு. n. suffusion.
Sugar (n) - சர்க்கரை, v. இனிப்பாக்கு Sugary a. Sugar-Candy n. கற்கண்டு Sugar-Cane, கரும்பு.
Suggest (V) - குறிப்பாகத் தெரிவி,கருத்தைத் தோற்றுவி. suggestive a. suggestion n.
suicide - தற்கொலை, தற்கொலை செய்து கொள்பவர்,தற்கொலையாளர் Suicidal a.
sui generis (a)- தனி முதன்மையுள்ள, பிறிதின் சார்பற்ற, தான்தோன்றியான. Sui juris (a)- தன உரிமையினாலான தன்னுரிமை யுடைய.


suit n. (sue) வழக்கு, வேண்டுகோள், மனு, காதல் கோரல், மணக்கோரிக்கை, விளை யாட்டுச் சீட்டில் ஒரு வரிசை, உடைத்தொகுதி, v. தகுதியாயிரு, பொருத்தமாயிரு. பயன்படு. suitable a. full suit n. முழுஉடை, அங்கி, appeal suit.மேல் வழக்கு original suit முதல் வழக்கு, முதல் தடவை வழக்கு. pauper suit ஏலான் வழக்கு
Suitcase (n) - கைப்பெட்டி.
suite (n) - உழையர்க்குழு,அடுக்காயிருக்கும் பொருள்களின் கூட்டு, அறைத் தொகுதி.
suiting (n) - உடுப்புத் துணி.
Suitor n (sue) - வழக்காடுபவர்,வாதி, மனுச்செய்பவர், (பெண்ணின) காதல் கோரு பவர், மனங்கேட்பவர்.
sulk (v) முகறையை இழுத்துக் கொண்டிரு, வெறுப்பு,சினங்காரணமாகப் பாராமுகமாயிரு. Sulky a.
sullen (a) - சிடுசிடுப்பாயுள்ள.Sullenness n.
sully (v) - கறைப்படுத்து.
sulphur (n) - கந்தகம்.sulphate n. - கந்தகி, கந்தக உப்பு. sulphide, கந்தகை. Sulphureous, Sulphuric a.
sultan n. (fem, sultana) - (முஸ்லீம் வழக்கு) அரசன், Sultanate n. அரசு.
sultry (a) - புழுக்கமான, உள் வெப்பமான, காற்று இறுக்கமான. n. Sultriness.