பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/628

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

talking to

622

taріоса


talking to - கண்டிப்பு,வசவு.
talkies (n)- பேசும் படங்கள்.
tall (a) - உயரமான, நெட்டையான
a tall story- நம்ப இயலாக் கதை tall boy (n) - உயரமான நிலையடுக்கு.
tallow (n) - விலங்குக் கொழுப்பு.
tally (n) - கணிப்பு, கணிப்பெண், அடையாள அட்டை (V) - இசையச் செய், ஒத்துவரச் செய்.
talon (n) - பறவை நகரம்.
taluk (n) - வட்டம்.
tamarind (n) - புளியமரம், அதன் பழம்.
tamburine (n) - கஞ்சிரா.
tame (a) - பழகிய, (v) - பணிவுள்ள எழுச்சியற்ற, பழக்கு.
tameable (a) - பழகக்கூடிய.tamer (n) - பழக்குபவர். tamely (adv).
tamp (n) - திணி (புகையிலை).
tamper (v) - உரிமையின்றித் தலையிடு, மாற்று.
tan (n) - தோல் பதனிட உதவும் பட்டை. பழுப்பு நிறம். (v) - தோலைப் பதனிடு, பழுப்பு நிறமாக்கு, tanning - தோல் பதனிடல். tanner (n) - தோல் பதனிடுபவர்.
tandem (adv) - ஒன்றன் பின் ஒன்றாக.(n) - ஒன்றன் பின் ஒன்றாகச் செல்லுதல்.


tang (n) - குறிப்பிட்ட சுவை,மணம்.tangy (a).
tangent (n) - தொடுகோடு. tangent galvanometer - டேன்ஜண்ட் மின்னோட்டமானி.
tangible (a) - தொட்டு அறியக் கூடிய, தெளிவாகத் தெரியும் tangibility (n).
tangle(v) - சிக்கலாக்கு, குழப்பு.(n) - சிக்கல். tangle some (a)
tank (n) - தொட்டி, குளம், பீரங்கி வண்டி,
tankful (a) - tank-bed - குளத்தின் அடி.
tanker (n) - எண்ணெய்க் கப்பல்.
tantalize (V) - ஆசை காட்டி ஏமாற்று, மலைக்க வை, நம்ப வைத்து கழுத்தறு. tantalizingly (adv).
tantamount (a) - சமமான நிகராய் உள்ள,
tap (V) - இலேசாக அடி, தட்டு (n) - குழாய்த் திருகு (v) துளையிடு,வடி,முயன்று பார், நாடிப் பார்.
tape (n)- நாடா,துணி,தார். tape - recorder நாடாப் பதிவி. tape - measure - அளவை நாடா.
taper (n) - மெழுகுத்திரி, சிறு விளக்கு (v) ஒடுங்கிச் செல், குவி, கூம்பு.
tapering (a) - குவியும்.
tapestry (n) - ஓவியத்திரை,திரைச்சீலை.
நாடாப் பதிவி. tape-worm (n) - நாடாப்புழு.
tapioca (n) - மரவள்ளிக்கிழங்கு, குச்சிக் கிழங்கு (மைதாமாவு).