பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

budge

60

bumpy



budge (v) - நகர், இடம் விட்டுக் கொடு.
budget (n) - வரவு செலவுத் திட்டம், பாதீடு. (v) - பாதீடு செய்.
buff(n)-எருமைத்தோல், மஞ்சள் நிறம், மெருகுப் பட்டை (v) - மெருகிடு.
buffalo(es) (n) - எருமை.
buffer (n) - மோதல் தாங்கி,அதிர்ச்சி தாங்கி.buffer state (n) - நடுநிலை நாடு (கசப்பு நிலை நீக்கும்)
buffet (n) அடித்தல், தாங்குதல், தானே உணவு எடுத்து உண்ணல், உணவுக் கூடம், பக்கப் பலகை (v) - அறை, அடி.
buffoon (n) - கோமாளி.
bug (n) - சிறு பூச்சி, நோய், ஒட்டு கேட்கும் கருவி. bed-bug - மூட்டைப் பூச்சி.
bugbear (n) -பூச்சாண்டி.
bugle (n) - கொம்பு, எக்காளம்.
build (v) - கட்டு (n)- வடிவம், builder (n) -கட்டுநர். building (n) - கட்டிடம்.
bulb - குமிழ்,பூண்டு.bulbous(a) குமிழ் வடிவமான,
bulge (v) - புடை,வீங்கு (n) - புடைப்பு, வீக்கம், வளைவு bulgy (a)
bulk (n) - பருமன், பெரும் பகுதி, சரக்கு (v)- சிறப்புள்ளதாக இரு. bulky (a).


bull (n) - காளை, மாடு, யானை, திமிங்கலம் முதலியவற்றின் ஆண் விலங்கு. கட்டளை (போப்), விலை ஏற்றுத் தரகர், bull-dog (n) - நாய் வகை.
bull-dozer (n)- நிலச்ச்சமன் பொறி.
bullet (n) துப்பாக்கிக் குண்டு.
bulletin (n) - செய்தியறிக்கை.
bullion (n) - வெள்ளி அல்லது பொன்கட்டி, பாளம்.
bullock (n) - மாடு,bullock-cart - மாட்டுவண்டி. bullish (a) bull's eye (n)- துப்பாக்கி சுடும் இலக்கு மையம்,இலக்கு மையம், விளக்கின் முகப்பாகமுள்ள குவிகண் ணாடிச்சில்.
bully (n) - கொடுமையாளன்(V) கொடுமைப் படுத்து, அச்சுறுத்து, அடக்கியாளு.
bulwark (n) - அலங்கம்,தடைச் சுவர், பாதுகாப்பு பா.rampart
bumble(v)-அருவருப்பாகச்செய்.
bump (v) - மோது,முட்டு,இடி (n) - மோதுதல்.
bumper (n) - சாராயம் நிறைந்த கிண்ணம், மிகு பெருக்கம், ஏராளம், முட்டுத்தாங்கி (ஊர்தி) bumper stock - கூடுத்ல் இருப்பு
bumptiousness (a) - இறுமாப்பு.
bumpy (a) - நொடியான,குண்டு குழியுள்ள, ஆட்டங்கொடுக்கும், துள்ளிக் குதிக்கும்