பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Chirik

79

Christen



chink (n) - இடுக்கு,கீறல்.ஓட்டை,பிளவு.(V) - கிண்கிண்' என்று ஒலி.
chip (v) - சிறுதுண்டு வெட்டு, நறுக்கு,(n) - சிறு துண்டு நறுவல். Chippings - சரளைக் கற்கள்.
Chiromancy (n)- கைவரை பார்த்துக் குறி சொல்லும் நூல்.
Chiropodist (n) - காலடி நோய் மருத்துவர். Chiropody (n) - காலடிநோய் மருத்துவம்.
Chirp (v) - கீச்சிடு (பறவை,பல்லி)
chirrup (n) - கீச்கீச் என்று ஒலி.
chisel (n) உளி (V) - செதுக்கு.
chit(n)- சிறிது, இனிமையானது,முறிச்சீட்டு.
Chit-chat (n) - வம்பளப்பு,பொழுது போக்குப் பேச்சு.
chivalry (n) - நல்வீரர் பண்பு, பெருந்தன்மை, அருளாண்மை. chivalrous (a). Chivalrously (adv).
chlorine (n) -குளோரின்,நச்சு வளி. chloroform (n) - குளோரபாம், மயக்கமருந்து.
Chlorophyll (n) - பச்சையம்(இலை).
Chocolate (n) - சாக்கலேட். கோகோவிலிருந்து செய்யப்படும் இனிப்பு.
Choice (n) - தேர்வு, தேர்ந்தெடுப்பு, விருப்பம்,மிகச் சிறந்தது. (a) ஆராய்ந்து தேர்ந்தெடுத்த, மிக உயர்ந்த,

choir (n) - பாடற்குழுக் கூட்டம் Choir music - பாடற் குழு இசை
choke (v) - திணறவை, வழியடை, தொண்டை யடைத்துக் கொள் (n) - இறுகிய பகுதி, தடைசெய், ஒழுங்கு வழி, மின் கட்டுப்படுத்தி.
choker (n) - கழுத்து மாலை.
cholera (n)- கழி நோய்,காலரா.
choose(v) - தேர்,தேர்ந்தெடு.
chop (v) - வெட்டு. (n) - இறைச்சித் துண்டுப் பொரியல். chopper (n) - வெட்டுபவர், வெட்டு கருவி. Chopsticks - உண்கோல்.
chord (n) இசைக்கருவிகளின் தந்தி, நாண் (வரை).
Chore (n) - அன்றாட வீட்டு வேலை, அலுப்புதட்டும் வேலை,
Choreograph - (n) - நட்டுவாங்கம். choreography (n)- நட்டுவாங்க இயல். Choreographer (n) - நட்டுவனார்.choreographic (a).
Chortle (n) - மகிழ்ச்சிக் கொக்கரிப்பு. chortle (v) - மகிழ்ச்சிக் கொக்கரிப்பு செய்.
Chorus (n) - பாடகர்,சேர்ந்து பாடல். பல்லவி. Choral (a).
Christ (n) - இயேசு பெருமான்.
Christen (v) - பெயரிடு,christening (n) - பெயரிடல். Christendom (n) - கிறித்துவ உலகு.Christian (n) - கிறித்துவர்.Christmas (n) - கிறித்து பிறந்த நாள் விழா Christianity (n) -கிறித்துவ சமயம்.