பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

climacteric

84

clone



climacteric (n) - உடல் ஆற்றல் ஒடுங்கு காலம். வீட்டு விலக்கு 'நிற்றல் (பெண்).
climate (n) - தட்பவெப்பநிலை. climatic (a) climatology (n)தட்பவெப்ப இயல்.
climax(n)- உணர்ச்சி முகடு, உச்ச கட்டம். Climactic (a), (x anticlimax) climax (V) -உச்ச கட்டத்தை அடை.
climb (v) - ஏறு. climber (n) - படர் கொடி, மலையேறுபவர். climb down - தவறை ஒப்புக் கொளல்.climbing frame - குழந்தை ஏறும் சட்டகம்.
clime (n) - திணை, நாடு, தட்பவெப்ப நிலை. clinch (v) - ஆணியடி, ஒன்றை இறுதியாக முடிவுசெய், இறுக விடாது பிடி (குத்துச் சண்டைக்காரர்) (n) - இறுகப் பிடித்தல், தழுவுதல். Clincher (n) - வாத முடிவுக் குறிப்பு, தீர்மான வாதம், தீர்வுரை.
cline (n) - படித் தொடர் நிலை(வேறுபாடு), உயிரியல்.
cling (v) - ஒட்டிக்கொள், பற்றிக் கொள்.clinging (a) - ஒட்டிக் கொள்ளும், உணர்ச்சி வயப்படும்.
Cling film (n)- ஒட்டு படலத்தாள்.
clinic (n) - மருத்துவமனை, மருத்துவகம். clinical test- மருத்துவ ஆய்வு. clinical thermometer - மருத்துவ வெப்ப நிலை மாணி.<br


clink (n) - கண்ணாடிக்கலன் மோதுஒலி (V) - இவ்வொலி எழுப்பு.
clinker (n) - கற்பொருள் (உலை).ciinker-buiit (a)- கெட்டியாகக் கட்டப்பட்ட (படகு).
clip (v) - இறுகப்பிடி, கவ்வு, கத்தரியால் வெட்டு. clip (n) - கவ்வி, பிடிப்பி. clipper {n} - கத்தரி, இடுக்கி, மயிர் வெட்டி. clippings (n) - துண்டு துணுக்குகள்.
Clip-clop (n) - குதிரை காலடி ஒசை.
clique (n) - தன்னலக்கும்பல், உட்குழு. cliquy (a).
clitoris (n)- அல்குல்அரும்பு(பெண்)
cloak (n) - மேலாடை (v)- அணி.
clock(n) - கடிகாரம்.clock-work - கடிகார அமைப்பு, ஒழுங்கு. Clock-wise - வலஞ்சுழி (x anticlock-wise).
clod (n) - மண்கட்டி, முட்டாள்.
clog (n) - தடை, மிதியடிக் கட்டை clog dance- மிதியடிக் கட்டை நடனம். clog (v) தடு. கால் கட்டாயிரு.
cloister(n)- துறவிமடம்,மூடு வழி,ஒதுக்கிடம் (v) மூடு.cloistered (a) - ஒதுங்கிய, தனித்துள்ள.
clone (n) - பால்தொகுதி (உயரியல்), படியாக்கம் (கணிப்பொறி). (v) - தொகுதியாக அமை, படியாக்கம் செய் பாலியல் சேர்க்கையின்றி ஒரு திசுவிலிருந்து உயிரியைத் தோற்றுவி.