பக்கம்:ஆசிய ஜோதி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயலாது; இக்குறையைக் கவிமணியவர்களின் "ஆசிய 'ஜோதி இப்பொழுது போக்கிவிட்டது. ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் ஆசிய ஜோதி (Light of Asia) என்னும் பெயரில் கவிதை நூல் ஒன்று வெளியிட்டிருக்கிறார். அந்த நூலைத்;தழுவித் தமிழ் மணம் கமழக் கவிமணியவர்கள் பழகு தமிழில் பாடி யளித்திருக்கிறார்கள். அரசவைக் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்கள், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்களுடைய கவிதைகளில் ஈடுபட்ட பொழுது, அவர்களது மனத்தை முற்றும் கவர்ந்தது ஆசிய ஜோதி.

      "தேசிக விநாயகத்தின் கவிப்பெருமை
        தினமும் கேட்பதுஎள் செவிப்பெருமை
        ஆசிய ஜோதியெனும் புத்தர் போநம்
        அழகு தமிழில் சொன்னான் அதுபோதும்”

என்பது கவிஞரது வாக்கு, ரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியார் அவர்கள், கவிமணி அவர்களை அறிவதற்குத் தம்மை முதன்முதல் தூண்டியது "கருணைக் கடல்' என்ற ஆசிய ஜோதிப் பாடல் என்று, தமது 'இதய ஒலி'யில் வெளி யிடுகிறார். இங்ஙனமாகப் பலரும் கவிமணியவர்களின் கவிதையாற்றலை உணருமாறு, அவர்கள்தம் பெருமையைத் தமிழுலகில் பரப்பியவை, 'கருணைக் கடல்' முதலிய ஆசிய ஜோதிப் பாடல்கள். ஆசிய ஜோதிப் பாடல்களைக் குறித்துப் பேராசிரியர் திரு. வையாபுரிப் பிள்ளையவர்கள், தமது 'தமிழின் மறுமலர்ச்சி" என்ற நூலில் பின்வருமாறு வெளியிட் டுள்ளார்கள். "புத்தர்பிரானது சரித்திரப் பகுதிகளிற் லெவற்றை அதியற்புதமான தமிழில் பாடியுள்ளார். இப்பகுதிகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/8&oldid=1439744" இலிருந்து மீள்விக்கப்பட்டது