பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

lumber குப்பை கூளம், மரம்
lunatic கிறுக்கு, கோட்டி
lunch நண்பகல் உணவு
lung நுரையீரல்; உயிர்ப்புப் பை
lust காமம்
lustre ஒளி, பளபளப்பு
luxure சொகுசு, இன்பப் பொருள்
lying பொய் சொல்லல்
lyrical கீத
lymph நிண நீர், பாட்டு (டை)
M
M.A. ம.வ. (மன வயது)
machine இயந்திரம், பொறி
machinery பொறியமைப்பு
macrocosm பேரண்டம்
mad பித்தேறிய, கிறுக்குற்ற
magazine சஞ்சிகை, பத்திரிகை
magic மந்திரம்
magnetic காந்த
magnitude அளவு
main முதன்மையான, மூல
maintenance காப்பாற்றல், பிழைப்பு
majority பெரும்பான்மை
major premise துணி பொருள் வாக்கியம்
major term துணி பொருள் சொல்
make-believe பாசாங்கு, பாவனை, நடித்தல்
make-up வேடங்கட்டுதல்
maladjustment பொருத்தப் பாடின்மை
maladministration ஆட்சிக் குளறுபடி
malady நோய், பிணி
malaria மலேரியா
male ஆண்
malformation தோற்றக் கேடு, தப்பமைப்பு
malnutrition உணவுச் சத்துக் குறை
malpractice கெட்ட வழக்கம்
mammal பால் உணி, கருப்பையுயிர், பாலி
mammoth மிகப் பெரிய
man மனிதன்
management செயலாட்சி
manager செயலர், செயலாட்சியாளர்
mandate கட்டளை
mania பைத்தியம், வீறு
manic depression வீறுச் சோர்வு
manifest வெளிப்படை (யான)
manifest content வெளிப்படைப் பொருள்
manifesto கொள்கையறிவிப்பு
manifold பல படியான, பல வகை
manipulation கையாளுதல்
mankind மனித இனம்
manner வகை முறை
mannerisms அங்கச் சேட்டைகள்
manual கைப் புத்தகம், கையேடு, கை வினை
manual work உடலுழைப்பு
manufacture உற்பத்தி
manure உரம், எரு
manuscript கையைழுத்துப் படி
map நிலப் படம், தேசப் படம்
march அணி வகுத்து நட, எடு நடை, “நட”
margin ஓரம், ஓர வரம்பு, விளிம்பு
mark மதிப்பெண், குறி, அடையாளம், அமிசம், மார்க்கு
market சந்தை, அங்காடி
marriage திருமணம், மன்றல், மணம்
martial மற, சமர் புரி
masculine ஆண்(பால்)
masculine protest ஆண் அவாதல்
mask முகமூடி, மாற்றுரு
masochism வலி வேள் வெறி, துன்பு உண் வேட்கை
mass திரட்சி, கூட்டம்
mass drill திரள் பயிற்சி, பேரணிப் பயிற்சி
mass suggestion கூட்டக் கருத்தேற்றம்
massage தசை பிடித்தல், உடம்பு பிடித்தல்
masses மக்கள் திரள்
master ஆசிரியர், வல்லுநர்
master-sentiment தலைமைப் பற்று
mastication மெல்லுதல்