பக்கம்:ஆஞ்சநேய புராணம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40 என்றும் எவர்க்கு மருள்வான் அடிபோற்றி!
    சீரிய னவனென் சிங்தையுள் கின்றன் !
    நேரிலா அறிவன் அவன்தாள் வணங்கி
    எங்கு நிறைந்தஎம் பெருமாற் பணிந்து
    நங்கை நல்லூர் நாச்சியை வழுத்தி

45 அஞ்சு கரத்தனின் அருளது பெற்று
    வெஞ்சமர் புரிந்த வேலனை நினைத்து
    சங்குசக் கரத்தான் தாளினை பரவி
    இங்கி ராமன்அடி யான்றிறல் பகர்வேன்.
    அஞ்சிலே ஒன்று பெற்றவன்; அவன்தான்
 
50 அஞ்சலை யன்புச்சேய் அகில மெங்கணும்
    பங்தெனப் பறந்து சென்றா னேர்நாள்
    காயுங் கதிர்ஒர் கனியெனப் பாய
    சேயெனப் பரிதியும் சினந்தில னிருந்தான்
    கண்ணில் தெரிந்த ராகுவும் கனியென

55 நண்ணிட அமரர்கோன் சினந்துவச் சிரத்தால்
    வாயு தநயனைப் புடைத்ததன் பின்னர்
    தாய்போ லவனைப் பரிவுட னெடுத்து
    'அநுமன்' என்று அன்புட னழைத்து
    அந்தரத் தமரர் தமைவரம் பலவும்

60 சுந்தரற் கருளச் செய்தனன் ஐயனும்
    அமரர்க் கமர னாகி யத்துடன்
    தமர்அனை வர்க்கும் தண்ணளி சுரங்தான்
    பரிவொடு பகலவன் பண்டை நூல் சொல்ல
    பருகுமார் வலனாய்ப் படிவம் படித்து