பக்கம்:ஆடரங்கு.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

ஆடரங்கு

தற்பெருமையாக இதுவும் சொன்னான். "என் தகப்பனார் நாலுவருஷங்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தார்."

ராஜா ஒரு விநாடி யோசித்து விட்டுச் சொன்னான். “இப்போதிருக்கிற நிலைமையில், என் தகப்பனார் சந்தோஷத்துடன் இறப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை."

பிறகு நண்பர்கள் இருவரும் பழசு புதுசு எல்லாவற்றையும் பற்றி வெகு நேரம் பேசிக்கொண் டிருந்தார்கள். சிவசங்கரன் விடை பெற்றுக்கொண்டு கிளம்பும்போது ராஜா அவனுடன் பேசிக்கொண்டே வெளியே வந்தான். வெளியே நின்றது உண்மையிலேயே பெரிய கார்தான். சிவசங்கரனுடைய தகப்பனார் உண்மையிலேயே சந்தோஷமாகத்தான் இறந்திருப்பார் என்று ராஜாவுக்குத் தோன்றியது.

 

 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/141&oldid=1524977" இலிருந்து மீள்விக்கப்பட்டது