பக்கம்:ஆடரங்கு.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியாசிரியனின் மனைவி

31


"இல்லாவிட்டால், ஒன்றுமே சம்பாதிக்காமல், அப்பா வைத்துவிட்டுப் போன செல்வத்தையும் நாளடைவில் கரைத்து விட்டு, பெண்டாட்டியையும் பிள்ளையையும் தெருவில் நிற்க விடுவதுதான் புருஷ லக்ஷணமோ?"

"எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார் என்று சொல்லிக்கொள்ள உனக்கு ஆசை."

"என்னவோ! உலகத்திலே நாலு பேர் இருக்கிற மாதிரி எல்லாம் இருக்கவேணும் என்றுதான் எனக்கு ஆசை."

"மந்தை ஆட்டிலே நானும் ஓர் ஆடாக இருக்கவேணும் என்கிறாய் நீ, அவ்வளவுதானே !”

"வேண்டாம். வேண்டாம். ஆடாக இருக்கவேண்டாம். இலக்கியாசிரியனாகவே இருங்கள்!" என்று காமு சற்றுக் கோபமாகவே சொல்லிவிட்டு விறுக்கென்று உள்ளே போய் விட்டாள்.

2

நாளடைவில் வேறு வழி காணவில்லை. இலக்கியாசிரியனாயிருக்க வேண்டிய சுவாமிநாதன் டில்லியில் குமாஸ்தாவாகிவிட்டான்.

எழுதுவதில்தான் அதிர்ஷ்டமில்லையே தவிர அவனுக்கு, குமாஸ்தா வேலையில் போதிய அதிர்ஷ்டம் இருந்தது. எண்பது ரூபாயில் ஆரம்பித்தான். ஆனால் இரண்டு வருஷங்களுக்குள்ளாகவே அவன் சம்பளம் இரு நூறுக்கு உயர்ந்துவிட்டது. அதற்கு மேல் பதவி உயராது. சம்பளம் வருஷா வருஷம் உயரும். அவனுடைய ஐம்பத்தைந்தாவது வயதில் நாநூறை எட்டும். இருநூறு ரூபாய் உதவிச் சம்பளத்துடன் அவன் 'ரிடையர்' ஆகலாம்.

இலக்கியாசிரியனாகிப் பெயரும் புகழும் சம்பாதித்திருக்க வேண்டிய தான் இப்படிக் கேவலம் ஒரு குமாஸ்தாவாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/36&oldid=1528818" இலிருந்து மீள்விக்கப்பட்டது