பக்கம்:ஆடும் தீபம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

ஆடும்


பாலையிலே வந்துதித்த அந்த வசந்தத்தை இயற்கையின் கொடுமைகள் சாகடிக்கநினைக்கலாம்.ஆனால் வசந்தம்’ சாகாது. அதன் இலட்சியங்கள் முடிவு பெறும் வரை அது சாகவே சாகாது.

பொய்மையின் இருண்ட நகங்களில் சத்திய தேவதை’ யின் இரத்தக் கறை படியலாம். ஆனால் வாழ்வின் உயிர்ப்பாக இருக்கும் அவளை அதனால் கொன்றுவிட முடியாது. நிச்சயமாக, சத்தியமாக முடியவே முடியாது!

அல்லி ஒரு தீபம்; அல்லி ஒரு வசந்தம்; அல்லி ஒரு சத்திய தேவதை! அவள் வாழ்வாள்; அவளது இலட்சியங்களும் வாழும்; அருணாசலம் வாழும்வரை, அல்லது அவளது தடம் புரண்ட வாழ்வு செத்து வீழும் வரை!

விதியின் சட்டமா இது? இல்லை; விதியே இதுதான்!

அல்லியின் சிந்தனைகள் அவளது உள்ளத்தைப் போலவே மெய்ம்மறந்து திரிந்தன.

சுவர்க் கடிகாரம் ஏழு முறை ஒலித்து நிறுத்தியது.

‘ஐயய்யோ, இவ்வளவு நேரம் ஆயிடுச்சே?” என்று அவசர அவசரமாக எழுந்த அல்லி அறைக்கு வெளியே நடந்தாள்.

எதிரே வந்தாள் நாச்சியாரம்மா. “ஏம்மா, இப்பத்தான்

எழுந்திரிச்சியோ: சீக்கிரம் பல் விளக்கிவிட்டு வா:சூடா இட்லி தர்றேன்!” -

சரிங்கம்மா...’

அல்லி நடந்தாள். அவள் நடையில் ஒரு துள்ளல்.

அவுங்களுக்குத்தான் என் மேலே எவ்வளவு பிரியம்.'-அவளது மனம் நினைத்தது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/109&oldid=1317223" இலிருந்து மீள்விக்கப்பட்டது