பக்கம்:ஆடும் தீபம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



112

ஆடும்


நாட்டுக்குத் தேவையான கூட்டுறவு முறை
  • பன்னிரண்டு பேர் சேர்ந்து, தொடர்ந்து ஒரு நாவலை எழுதுவதாவது? சுவாரசியப்படுமா? நடை மாறுபாடுகளும், கருத்து வேற்றுமைகளும் குறுக்கிட்டு நாவலின் சுவையைக் குறைத்து விடாவா?’ என்று என்னிடம் சிலர் ஆடும் தீபம்’ பற்றி ஐய வினா எழுப்பினார்கள். மழுப்பினாற்போல் பதில் சொன்னேன். எனக்குள்ளேயே இந்த ஐயம் இருந்ததுதான் மழுப்பலுக்குக் காரணம்.
ஆனால்

இதுவரை வளர்ந்து வந்திருக்கிற கதைப்பகுதி அந்த ஐயம் வீண் என்பதை மெய்ப்பித்து விட்டது.

கதாநாயகி அல்லியின் நிலை-அதாவது அவளுடைய அந்தஸ்து சிறுகச் சிறுக, மறைமுகமாக, வெகு அழகாக வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது. இப்போது அவளிடம் கிலி இல்லை. மருட்சி இல்லை. தன்னைப் பற்றி, தன்னைச் சுற்றி உள்ளவர்களைப் பற்றி, ஊரைப்பற்றி, உலகத்தைப்பற்றிஅவள் நன்றாகத் தெரிந்து கொண்டவள் ஆகி விட்டாள். பள்ளிக்கூடத்திலே படிக்காததையும், அந்தப் படிப்பிலே அறிந்து கொள்ள முடியாததையுங்கூட வாழ்க்கையில், உலக அனுபவத்தில், நேரில், கண்டு அறிந்து கொண்டு விட்டாள். இனி எந்தச் சக்தியும் அவளை எதுவுமே செய்ய முடியாது. கதையின் முடிவிலே அவள் வீராங்கனையாக நின்று நம்மை நோக்கி வெற்றிப் புன்முறுவல் செய்யப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/113&oldid=1317656" இலிருந்து மீள்விக்கப்பட்டது