பக்கம்:ஆடும் தீபம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பொறி ஒன்று:

இரட்டைப்
புலிகளுக்கிடையே
ஒற்றை மான்!

மாங்குடி மண் நிலவில் குளித்தது. மனைகள் ஒளியில் குளித்தன. இது தஞ்சை மாவட்டத்திலோ, மற்ற தமிழ் நாட்டுப் பகுதிகளிலோ காண முடியாத அதிசயம். மனைகள் என்றால் எல்லாமே இந்துக்களைச் சேர்ந்ததல்ல. கிறித்தவர்கள் இருந்தார்கள்: முஸ்லீம்கள் இருந்தார்கள். மதத்தால் வேறுபட்ட இவர்கள், மொழியாலும், வழியாலும் ஹிந்துக்களோடு தோழமை பூண்டிருந்தார்களே தவிர, தெய்வீகச் சடங்குகளில் பிரிந்து நின்றனர். வருஷம் எல்லாம் பிரிந்து நின்றாலும் மும்மதமும் ஒரேயொரு நாள் கூடி நிற்கும் வாய்ப்பு இந்த ஒளித் திருநாளில் கிடைத்தது. ஒளிக்கும் மதம் உண்டா? காற்றுக்கு, நீருக்கு எல்லாம் மதம் உண்டா? இயற்கையை வழிபடுகிற எல்லா மதங்களுமே இதை ஒப்புககொண்டாலும், எம்மதமும் சம்மதமாக நின்று கூடி வழிபடுவதில்லை. திருக்கார்த்திகை என்றால் ஹிந்துக்களின் விழா என்று முகத்தைத் திரும்பிக்கொள்ளும் கிறித்தவர்களும், முகம்மதியரும்தான் தமிழ் நாடெங்கும் விரவி இருக்கின்றனர்.

மாங்குடி அதற்கு மாறுபட்டு நின்றது. அக்கிரகாரத்திலும், மறவர் குடியிருப்பிலும் யாதவர் வசிக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/12&oldid=1390036" இலிருந்து மீள்விக்கப்பட்டது