பக்கம்:ஆடும் தீபம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



120

ஆடும்


எண்ணிச் சங்கடப்பட்டுக்கிட்டிருக்கறப்ப, இந்த மனிதர் தன் இஷ்டத்துக்கு என்ன என்னவோ சொல்லிக்கிட்டே போறாரே!” என்று எண்ணியதும் அல்லிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அவள் இயல்பின்படி, “அழுகையின் நடுவே சிரிப்பு’ என்று அமைந்த அவள் வாழ்க்கைத் தத்துவத்தின்படி அவள் கலீரென்று தன்னை மறந்து சிரித்து விட்டாள். ராஜநாயகம் அந்தச் சிரிப்பையும் தம் போக்குக்கு அனுசரணை ஆக்கிக்கொண்டு, அப்பாடா!’ என்று கூறி நிம்மதிப் பெருமூச்செறிந்ததும். அவளது சிரிப்பு மேலும் தொடர்ந்தது; சிரித்துக்கொண்டே இருந்தாள்,

‘அம்மா ; இதில்ல அழகு!.. இதுதான் பழைய அல்லி, இதை விட்டுப்பிட்டு நீ சும்மா கண்ணைத் துடைச்சுக் கிட்டு, மூக்கைச் சிந்திப் போட்டுக்கிட்டிருந்தா அதை என்னாலே எப்படிச் சசிக்க முடியும் தாயே? நீ சாமானியப் பெண் இல்லே. என்னைத் திருத்தினே; அருணாசலம் பயலை மயக்கித் திருத்தினே; இன்னும் சாத்தையா, தொடப்பக்கட்டை இப்படி எத்தனை பேரை உன் அழகாலே ஆட்டிவச்சு மதியாலே திருத்த நீ பிறந்திருக்கியோ?அழகும் அருளும் அன்பும் பண்புமே உருவான மங்கல தீபம் நீ. ஆடாமெ அசையாமெ, பேசாமெ, சிரிக்காமெ பதுமை மாதிரி இருந்திட்டா பேச்சுக்கே இடம் இல்லே. நீயோ ஆடும் தீபமாய்ச்சுடர்விட்டுப் பிரகாசிக்கிறே. அல்லி, உன்னோட ஜோதிப் பிழம்பை நாடிவந்து அதன் மேலே மோதற விட்டில் பூச்சிங்க ஒண்ணு ரெண்டில்லே, இன்னும் எத்தனை எத்தனையோ! நீயோ அந்தப் பூச்சிங்களை மடிய அடிக்காமெ இருக்கலாம்; ஆனா’

பாம்பாம் என்ற குழலோசையுடன் தெருவாசலில் கார் வந்து நிற்கும் சந்தம் கேட்டது. தொடர்ந்து கார்க்கதவு திறந்து மூடும் சத்தமும் கேட்டது. ராஜநாயகம் தம் கவனத்தை ஓட்டி உற்றுக் கவனித்தார். அச்சமயத்தில் அல்லியின் முகத்திலும் அவள் பார்வை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/121&oldid=1319169" இலிருந்து மீள்விக்கப்பட்டது