பக்கம்:ஆடும் தீபம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



122

ஆடும்


குமுறிற்று. புத்தி உள்ளவளா இருந்திருந்தா ஒடற ரெயிலிலே முன்னே பின்னே தெரியாத ஒரு காளையைச் சிநேகம் புடிச்சிருப்பேனா? அதோட பலன் இப்ப என்ன ஆச்சு?'விடிஞ்சாகல்யாணம்;பிடிடாபாக்கு வெத்திலையை’ ன்னு இருக்கிற நிலைமையிலே பூகம்பம்னு ஏதோ சொல்லுவாங்களே, அந்த மாதிரி இல்ல வெடிச்சு வருது சேதி அருணாசலம் பார்வைக்கு ஒரு மாதிரியா இருந்தாலும், பேச்சு, நடவடிக்கை எல்லாம் ஒரு மாதிரியா இருந்தாலும், மனசு சுத்த வெள்ளை’ன்னு வாத்தியாரையாவும் சொன்னாங்க: ஆச்சியம்மாவும், சொன்னாங்க. சுகுணாவோட கடுதாசு என்ன சொல்லுது? கறைபடிஞ்ச, கவலை நிறைஞ்ச நெஞ்சின்னு இல்லே சொல்லுது? வயசுப்பொண்ணு ஒருத்தி மனசுவிட்டு எழுதக் கூடிய அளவு கடுதாசிலே எழுதியிருக்கா எழுதாத சங்கதி இன்னம் என்ன என்ன இருக்குமோ?...’ வாத்தியாரையாவின், ஓகோ’ என்ற சிரிப்பொலி அவள் கவனத்தை ஈர்த்தது. அடுத்து அவர் பேசிய சொற்கள் சிலவும் காதிலே விழுந்தன; கவனித்தாள். நல்லாச் சொன்னீங்க பலராமையா; நல்லாச் சொன்னீங்க ‘அது சரி; எதுக்கு நீங்க இப்போ இப்படிச் சிரிச்சீங்க?” ‘'எதுக்கா? அல்லிக்குப் பேசவராது; கொச்சைத் தமிழ் தான் பேசவரும்னுநான் சொல்லிவாய்மூடுறதுக்குள்ளே, ‘அந்தக் கவலையெல்லாம் உங்களுக்கு வேணாம்; நான் கவனிச்சுக்கிறேன்"ன்னு நீங்கசொன்னதும் எனக்குச் சிரிப்புத்தாங்க முடியல்லிங்க. இப்பவெல்லாம் சினிமாவிலே பாட்டுக்குத்தான் இரவல் குரல்னா, நீங்க பேச்சுக்குக்கூட இரவல் குரல் ஏற்பாடு பண்ணிடுவீங்க போல் இருக்கேன்னு நினைச்சேன். அப்படியானா பிரபல நடிகர் நடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/123&oldid=1319186" இலிருந்து மீள்விக்கப்பட்டது