பக்கம்:ஆடும் தீபம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



134

ஆடும்


யாரையா? இது என்ன கேள்வி? கபடமாக அல்லியைக் கடத்திச் சென்றுவிட்ட அந்தக் காலிப்பயலைச் சொல்கிறேன்!’

யார் அவன்?’

என்னுடன் விளையாடுகிறீர்களா?’’

‘யாரோ ஒருவனைக் குறிப்பிட்டுச் சொல்கிறாயே, அதற்காகக் கேட்டேன்.’’

இதோ பாருங்கள் வாத்தியாரே,என்னுடைய மனநிலை உங்களுக்குத் தெரியாது. தயவுசெய்து மேலும் என்னைக் கஷ்டப்படுத்தாதீர்கள்,’ என்று சற்று கோபத்துடனே சொன்னான் அருணாசலம்.

ராஜநாயகத்தின் வீட்டுக்கு முன்னால் வந்து நின்ற அல்லியை தூரத்திலிருந்தபடியே கவனித்துக் கொண்டிருந்தான் இன்னாசி அவனுடைய கண்களும் மனமும் அந்தக் காரில்தான் நிலைத்திருந்தன. ராஜநாயகமும் அருணாசலமும் மட்டுமே கீழே இறங்கியதைக் கண்டதும், அவனுக்குத் திக்கென்றாகிவிட்டது.அப்படியானால் அல்லிஎங்கே? கடந்த ஒருமணிநேரமாக அவன் அங்கேயேதான் நின்று கொண்டிருக்கிறான்.

அல்லி வீட்டில் இல்லை என்பதை அங்கு வந்தவுடனேயே புரிந்து கொண்டான். எங்காவது வெளியே சென்றிருப்பாள் என்றுதான் நினைத்து அங்கேயே நின்று கொண்டிருந்தான். ஆனால், அல்லியில்லாமல் இவர்களிருவர் மட்டும் ஏன் வருகிறார்கள்? ஏன் அவர்கள் முகத்தில் களையே இல்லை?” சிங்கப்பூரானிடம் சண்டையிட்டு ஆஸ்பத்திரியில் கிடந்த போது அவன் நினைத்ததை வேறு. சே...ஒரு அடங்காப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/135&oldid=1328128" இலிருந்து மீள்விக்கப்பட்டது