பக்கம்:ஆடும் தீபம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தீபம்

135


பிடாரிப் பெண் பிள்ளைக்காகவா நம் குலப் பெருமையையும் அழித்து, இப்படிச் சாகும் நிலைக்கு வந்திருக்கிறோம்? இந்த அல்லி போனால் இன்னொரு செந்தாமரை கிடைக்கிறாள்; முண்டம்’ என்று சிங்கப்பூரானின் கத்தி ஏற்படுத்திய வடுக்கள் அவனை எண்ணத் தூண்டின. ஆனால், அவன் பிழைத்து வெளியே வந்ததுமா அந்தச் சினிமாவைப் பார்க்க வேண்டும்? காலில் சதங்கையைக் கட்டிக்கொண்டு ‘சலக் சலக் கென்று நடந்து வந்து திடீரென புள்ளி மானைப்போல ஒரு பெண் துள்ளித் துள்ளி ஆடினாளே? - அந்த நிமிஷமே, அவனுடைய இதயம் அல்லியின் மீது துள்ளிச் சென்று விட்டது. அவன் என்ன செய்வான்? நீண்ட அந்த இரு விழி மலர்களிலும் அவள் என்னதான் காந்த சக்தியை வைத்திருக்கின்றாளோ? முத்துப் பல் வரிசை தெரிய மோகனமாக ஒரு புன் முறுவல் செய்தாளே, அதை அவன் வேறு எந்தப் பெண்ணிடமும் பார்த்ததில்லை. ஐந்தாம் தினத்துக் கூனல் பிறை:அங்கே இரண்டு வில்களைப்போன்ற கரிய புருவங்கள்; செம்பவழ உதடுகள்; ரோஜாக் கன்னங்கள்... ...! அன்றே அல்லியைக்காணமுனைந்தான்.இன்னாசி. சென்னைக்கு வந்து அழகி படத் தயாரிப்புக் கம்பெனியைத் தேடிப்பிடித்து, அல்லி தங்கியிருக்கும் ராஜநாயகத்தின் முகவரியையும் தெரிந்துகொண்டான். சிங்கப்பூர் சாத்தையனும் இந்த வழியைத்தான் கடைப்பிடித்தானென்றாலும். இன்னாசி கொஞ்சம் மூளையை உபயோகித்தான். ராஜநாயகத்தின் வீட்டுக்கு முன்னால் சில நாட்களாக நடை பயின்றான். அங்கு வந்த ஒன்றிரண்டு அலங்கார வல்லிகள் மூலம் அருணாசலத்துக்கும் அல்லிக்கும் திருமணம் நடக்கப்போகும் விவரத்தைத் தெரிந்துகொண் டான். பிறகு, அல்லியை முரட்டுத்தனமாக அழைத்துச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/136&oldid=1328132" இலிருந்து மீள்விக்கப்பட்டது