பக்கம்:ஆடும் தீபம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



186

ஆடும்


செல்ல முடியாதென்பதைப் புரிந்து கொண்டு, மூளையை உபயோகித்தே இனிமேல் வெற்றியடைய வேண்டும் என்று முடிவு செய்தான்.

அதன் விளைவாக உருவான அந்தப் ப்யங்கரக் கடிதத்தை மீண்டுமொருமுறை படித்தான். சுகுணா, நல்ல பெயர் தான்’ என்று தனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டான். ‘ஒரு வேளை உண்மையிலேயே அருணாசலத்துக்கு சுகுணா என்று ஒரு முறைப் பெண் இருந்து வைத்தால் என்ன செய்வது?--ஏன் இருக்கட்டுமே?” -

சுகுணா என்ற பொய்ப் பெயரிட்டு எழுதிய புரட்டுக் கடிதத்தை தபாலில் சேர்த்த பிறகுதான் அவனுக்கு நிம்மதி ஏற்பட்டது. எப்படியும் அருணாசலத்தின்முகத்தில் அல்லி காறித் துப்பி, அவனைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளினால் போதும். அதன்விளைவு என்ன என்பதைத் தெரிந்துபோகத் தான் இப்போது ராஜநாயகத்தின் வீட்டுக்கு முன்னால் அவன் பழியாய்க் கிடந்தான். அப்போது நடந்தவற்றை நினைத்த இன்னாசிக்கு மயக்கம் வரும் போலிருந்தது.

உச்சி வெயிலில் கரையில் பிடுங்கிப் போடப்பட்ட அல்லிக் கொடியைப் போல துவண்டு கிடந்தாள் அருணாசலத்தின் அன்புக்குரியவள். இமைகளிரண்டும் இறுக மூடியிருந்தன. இதழ்கள் இலேசாக விரிந்திருந்தன. அதி வேகமாகச் சுழன்று கொண்டிருந்த மின்சார விசிறி அளித்த காற்றினால் இரண்டு மூன்று கற்றைத் தலைமுடி அவள் முகத்தில் தவழ்ந்து விளையாடிக்கொண்டிருந்தன. அறை மூடப்பட்டு, அல்லி மட்டுமே தனிமையில் விடப்பட்டிருந்தாள். அடிக்கொரு முறை, காற்றில் அலைக்கழியும் ஜன்னல் திரைச்சீலை மட்டுமே படபடவென்று அடித்துக் கொண்டது. தவிர, அங்கே எந்த அரவமும் கேட்கவில்லை நேரம் வளர்ந்து கொண்டேயிருந்தது. அல்லி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/137&oldid=1333003" இலிருந்து மீள்விக்கப்பட்டது