பக்கம்:ஆடும் தீபம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீபம்

13


தும் மண்ணை முத்தமிட விண்ணகம் விட்டு இறங்கிவந்த பொன் மயக் கற்பனைகளை உலவவிட்டன.

‘பயிறு பச்சை விளஞ்சிட பாஞ்சுவந்த கார்த்திகை!

உயிரு விளங்கி வாழ்ந்திய ஓங்கிப்பிடிக்கிறோம் சுளுந்தோலை’,

ஓலைச் சுளுந்தில் தீ இட்டு ஒளியை ஏற்றிய இளைஞர்களின் வாய்கள் ஓங்கிப் பாடின. நீண்டு உயர்ந்து செறிந்த ஓலைப் பந்தங்களைப் பிடித்தவாறு வயல்களை நோக்கி வாலிபப் பட்டாளம் வீறு நடை போட்டுப் போய்க்கொண்டிருந்தது. விவசாயப் பெருமக்கள் திருக் கார்த்திகை தினத்தில் கருக்கு மட்டையில் கட்டிய ஓலைப் பந்தங்களை வயல்களின்சனி மூலையில் நட்டுவைத்தால் நன்றாக விளையும் என்பதில் நம்பிக்கை உள்ளவர்கள். ஒளிக் கடவுளின் தரிசனத்தைப் பயிர்கள் கண்டால் களத்தில் பொன்னைக் காணலாம். கண்டவர்கள் அவர்கள். கண்டதைக் கண்டு, காணப் போவதைக் காண ஒளிப்பந்தங்கள் வரப்புக்களில் போய்க் கொண்டிருந்தன.

பிள்ளையார் கோயிலுக்கு எதிரே கட்டப்பட்டிருந்த சொக்கப்பனை ‘வானத்தை நோக்கி உயர்ந்திருந்தது. ஈரப்பனை ஓலையில் வேயப்பட்டிருந்த அது, நிலவுப்பாலை அருந்தி பச்சை மாமலை போல ஒய்வெடுத்துக் கொண்டிருந்தது.பதினொரு மணிக்கெல்லாம் ஐயனார் கோயில் வேளார், பட்டாமணியம் பாளையப்பத் தேவரிடமிருந்து சுளுந்தை வாங்கி, சொக்கப்பனையில் எறிவார். பச்சை ஓலைபற்றி எரியும்; காய்ந்தது எரியும், பட்டது முறியும். பச்சை எரியுமா? திருக்கார்த்திகை சொக்கப்பனை எரியும். இது அதிசயம். கடவுள் சக்தியை நம்பாதவர்கள் அதிசயம் என்றுதான் சொல்லி விட்டுப் போகட்டுமே......!

இனம், மதம் என்ற பிரிவில்லாமல் மாங்குடியே ஒளித் திருநாளைக் கொண்டாடிய போது, ஒரேயொரு வீட்டில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/14&oldid=1390046" இலிருந்து மீள்விக்கப்பட்டது