பக்கம்:ஆடும் தீபம்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தீபம்

141


நீ ஆடிக்கொண்டிருக்கிறாயே. இந்த மாதிரி கேவலமான நாட்டியமல்ல அது!...’

சாத்தையன் நிலைமையை உத்தேசித்து தன் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டான்.

அல்லி, நீஎன்னைப் புரிந்து கொள்ளவேயில்லை. அந்த இன்னாசியுடன் சேர்த்து என்னையும் எடைபோட்டு விட்டாய். அவன் வெறி பிடித்து உன்னைச் சுற்றிக்கொண்டு வந்தான். நிஜமாகவே சொல்கிறேன்; உன்னைக்கல்யாணம் செய்து கொள்வதற்குத்தான் நான் ஆசைப்பட்டேன். இப்போதும் அப்படியேதான் நினைக்கிறேன்.’

“ உன் எண்ணத்தில் ஒருவண்டி சமுத்திர மணலை வாரிக் கொட்டி சமாதி வைத்து விடு. ஏனென்றால் அடுத்த வாரம் எனக்கும் வேறொருவருக்கும் கல்யாணம் நடக்கப் போகிறது.

யார் அவன் உன்னைக்கட்டிக் கொள்ளப் போகிறவன்? கண்டதுண்டமாக வெட்டிப் போடுவேன் கழுதைப் பயலை...!’

‘உன்வீரமெல்லாம் எனக்குத் தெரியும். வயற்காட்டுக் கரம்பையில் கத்திக்காயம்பட்டு வாயைப்பிளந்து விழுந்ததை நானல்லவா, பார்த்தவள்!’ “அல்லி, நீ ரொம்பப்பேசி விட்டாய். என்னப்பற்றி நீ தெரிந்தது ரொம்பக்குறைவு. இனிமேல் போகப் போகத் தெரியும் என் மகிமை!’

‘தூ...!”

இதைக் கண்டதும் ஆவேசம் கொண்டவனப் போல. அல்லீ’ என்று கதறிக் கொண்டே அல்லியின் மீதுபாய்ந்தான் சிங்கப்பூரான். அதேநேரத்தில் பலமான இரும்புக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/142&oldid=1337567" இலிருந்து மீள்விக்கப்பட்டது