பக்கம்:ஆடும் தீபம்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தீபம்

145


விடும் ஒரு தீக்கங்கு என அவள் முடிவு கட்டிவிட்ட அந்த ஆபத்து சந்தர்ப்பத்தின் நீடித்த விநாடிகளாகத்தான் அவளுள் ஒடிக்கொண்டேயிருந்தது.இன்னாசிதான் முதலில் தன் திகைப்பை நீக்கிக் கொண்டவன். அவன் தன் கையில் இருந்த கம்பியைப் பார்த்துக்கொண்ட போது அவன் உணர்வு ஒரு நிலையிலிருந்து நகர ஆரம்பித்துவிட்டது தெரியவந்தது. கையிலிருந்த கம்பி அவனுடைய வலது கையிலிருந்து கீழே விழுந்த வீதம், அதை அவன் தன்னையறியாமல் நழுவ விடவில்லை, சுயபிரக்ஞையுடன் வேண்டுமென்றே கீழே சற்று வீசியெறிந்த மாதிரியே போட்டான் என்பதைக் காட்டியது.

கம்பியைக் கீழே போட்டுவிட்டு அவன் தன்னைச் சுதாரித்துக் கொண்டு அல்லியை ஒரு பார்வை பார்த்தான். அப்போதுதான் அல்லியின் உடம்பினுள் ஒரு புதிய நடுக்கம் ஓடியது. இரும்புக் கம்பி அந்த மிருகத்தின் கையில் இருந்தவரையில் அவளுக்குப் பயம் இல்லை. கீழே சாத்தையன் மண்டை உடைந்து கிடந்தது அதை நிரூபித் திருந்தது. ஆனால் அந்த ஆயுதத்தை அந்த மிருகம் தன் மீது உபயோகிக்காது; அது அவளுக்கு நிச்சயம். உபயோகித்து விட்டிருந்தால் கூட தேவலை, ஒருவழியாக தனது இந்த முள் வாழ்வுக்கு ஒரு ஓய்வு கிடைத்திருக்கும்; நிம்மதியும் ஏற்பட்டிருக்கும். இப்போது நடக்கஇருந்த-இன்னும் நடக்கிற அத்தனையிலிருந்தும் தான் தப்பியிருக்க முடியும். அந்த விநாடிக்கு அல்லி இதைத்தான் விரும்பினாள். சிங்கப்பூரான் மண்டையைப் பிளந்த கையோடு என்னையும் கபால மோட்சம் பெறச் செய்திருக்கக் கூடாதா? இந்த மிருகம் ரத்தவெறி பிடித்ததுதானே! ஏன் கீழே போட்டது?'முகத்தை மட்டும் இன்றி அவனது உடல் அசைவு, வாய் அசைவையும் பார்வை பிசகாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/146&oldid=1337590" இலிருந்து மீள்விக்கப்பட்டது