பக்கம்:ஆடும் தீபம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தீபம்

147


இன்னாசிஎன்ன கேட்கப்போகிறான்? அல்லி நீ இந்த அருச்சுனனுக்கு தப்பிப்போயிற முடியும்னு எவ்வளவு தப்பாக நினைச்சுட்டே??-இப்படித் தானே ஆரம்பிக்கப்போகிறான்? மறுபடியும் அந்த இடிச்சிரிப்பா? அப்போதாவது சாத்தையன் ஓடிவந்துசேர்ந்தான். அவர்களை மோதிக் கவிழ்த்துக் கொள்ளவிட்டு தான் தப்பமுடிந்தது. இன்னாசி வயிற்றில் குத்துடன் கீழே விழுந்ததும், விலாக்குத்துடன் சாத்தையன் விழுந்ததும் தான் ஓடினதும் நினைவில் சுழல, இப்போதோ சாத்தையன் கீழே கிடக்கிறான் . இன்னாசிக்கு இடம் ஒழிச்சுவிட்ட மாதிரி. இன்னொரு உடல் நடுக்கம் அவளைக் குலுக்கியது. என்னதான் ஒவ்வொன்றையும் சமாளிக்கப் பார்த்தாலும் ஒன்றுமேலே ஒன்றாக வருகிற போது...’

இப்படி நினைப்பு ஓடிக்கொண்டிருக்கிறபோது, இன்னாசி ஏதோ தன்னைப் பார்த்துச்சொல்ல வருகிறமாதிரி அவன் உதடுகள் விரிய ஆரம்பிப்பதை சூட்சுமமாகக் கவனித்தாள் அல்லி,

அல்லி!!-கூப்பிட்டு நிறுத்திவிட்டான் இன்னாசி அதைக் கேட்டதுமே அல்லி அதென்னவோ அந்தப் பழைய அல்லி ராணியாகவே சீறினாள். சீ.மிருகம்! நீ பிளைச்சா வந்திட்டே? வயிற்றிலே குத்துப்பட்டும் தப்பிச்சிட்டியா?” என்றுகீழே கிடந்த சாத்தையனைப் பார்த்தாள்.

இன்னாசி பளிச்சென கையால் தன் வயிற்றைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். ஆழமாக இருந்த வடுவில் தன்விரலைக் கொடுத்து ஒருதரம் துளாவிக் கொடுத்துக் கொண்டான். சொக்கப்பனை இரவுச் சம்பவம் அவன் ஞாபகத்துக்கு வந்தது.கீழேகிடந்தசாத்தையனைப் பார்த்தான். ஒரு வேளை, எழுந்து அவன் தன் வயிற்றில் மீண்டும்!...” பீதியில் அவன் கண்கள் மீண்டும் ஒருதரம் கீழே கிடந்த இரும்புக்கம்பியைப் பார்த்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/148&oldid=1337600" இலிருந்து மீள்விக்கப்பட்டது