பக்கம்:ஆடும் தீபம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீபம்

15


வர்களல்லர். அதாவது தானாக இயங்கும் புத்தியுள்ளவர்கள் இல்லை.

செந்தாமரைக்குத் தெரியாதது எதுவும் அல்லியிடம் இல்லை. அல்லியை மலர் என்றால், செந்தாமரை நார் என்று கூறவேண்டும். உதிரி மலராக அல்லியை பார்க்கமுடியாது. நாரில் கட்டி முடிந்த பந்த மலராகத்தான் காட்சியளிப்பாள். அது கூட இந்த ஊருக்குப் பிடிக்கவில்லை யாரும் குத்திவிட்டிருக்காவிட்டால் வெண்டில், அண்ணன் அப்படி முகத்தை ஒடித்துக் கொண்டு பேசுவாரா? தாய் தகப்பன் இல்லாத பெண்ணாயிற்றே! சின்னஞ்சிறிசு, ஒண்ணுக்கு ஒண்னு துணையாக இருக்கட்டும் என்று எப்பொழுதுமே செந்தாமரையை அல்லியின் வீட்டில் இருக்கிவைத்துக்கொண்டிருந்தவர் சாயங்காலம் காத்து வெட்டிச் சாமியைப் போலத் தூள்பரப்பி விட்டாரே!

அப்பொழுது கண்மாய்ச் செம்பிரான் கல்லில் உட்கார்ந்து முகத்துக்குச் சவுக்காரம் போட்டுக்கொண்டிருந்தாள் அல்லி. வெண்டியப்ப அண்ணன் தொலிக்கலப்பையைத் தண்ணீரில்விட்டு எறிந்துவிட்டு, “ அல்லி!” என்று ஓங்கி இரைந்தார்.

சட்டுச் சட்டென்று முகத்தில் இரண்டு கைத் தண்ணீரை இறைத்துக் கழுவிவிட்டு ஏறிட்டுப் பார்த்தாள் அல்லி. என்ன அண்ணே?’ என்றாள் சுருண்டு புரண்ட குரலில்.

இனிமே நீ செந்தாமரையோட பேசினால் கெரண்டைக் காலை நறுக்கிப் போட்டுடுவேன்! சாக்கிரதை’ என்றார், புடைத்து விம்மிய புஜத்தை ஆட்டிக் கொண்டு.

அதைவிட நீ உயிரை விட்டுவிடு’ என்று கூறி இருக்கக் கூடாதா? அயர்ந்த கொன்றைக் காய்களைப் போல அச்சத்தோடு உதடுகள் அசைந்தன: ஏன் அண்ணே?’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/16&oldid=1390328" இலிருந்து மீள்விக்கப்பட்டது