பக்கம்:ஆடும் தீபம்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

ஆடும்



அந்தக் குப்பையில் சமூக நண்டுகளின்-புழுக்களின் பேச்சு மறைந்துதானே ஆகவேண்டும்?

பட்டணம் நெருப்பில் வீழ்ந்த அவள் வெளியேறுகையில் புடமிட்ட தங்கமாகத்தான் மாறினாள்.

மாங்குடி அவளை அழைத்தது. கலயமும் கஞ்சியுமாக ஒரு நாள் தாயார் நின்ற காட்சி கண்முன்நிழலாடியது. என் பிணத்தைக்கண்டு அன்று சிரித்தாயே அல்லி, இன்று: உன்னைக்கண்டு சமூகம் சிரிக்கும்படி விடலாமா?’ என்று அவள் நினைவில் அடங்காத தகப்பனார் கேட்பது போலத் தோன்றியது. அல்லி ஓடி விட்டாள்’ என்று மாங்குடி ஓலமிட்டால், அந்த ஓலம் அவளுடைய தாய் தகப்பன் இருவருடைய ஆவிகளுக்குக் கூடக் கேட்குமே?

அவள் திரும்பவேண்டும்; மாங்குடிதான் இனிமேல் அவளுக்குத் தாயும் தந்தையும்-நிலம் தான் குழந்தைவீடுதான் கணவன்.

சமையற்காரியம்மாள் அழைக்கவராமலே அல்லிபோய்ச் சாப்பிட்டாள். இது ராஜநாயகத்துக்குக் கூட வியப்பைத் தந்தது.

‘அல்லி”

அவருடைய அன்புக் குரலில் ஒரு நெகிழ்ச்சி.

  • “இ தோ... !”

“நான் ஒன்று தீர்மானித்திருக்கிறேன்!”

என்ன?”

நாம் இரண்டு பேருமாக சென்ன்யை விட்டு நாலுஇடங்களுக்குப்பிரயாணம் செய்யலாம் என்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/165&oldid=1389279" இலிருந்து மீள்விக்கப்பட்டது