பக்கம்:ஆடும் தீபம்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

ஆடும்


செந்தாமரை அழைத்தாள். உதடுகளின் ஒட்டுறவில் பாசம் ஒட்டி உறவாடியது. உயிருக்குத் தோழியாக அந்நாளில் மாங்குடி மண்ணிலே நிலவி வந்த செந்தாமரை இப்போது அல்லிக்குச் சகோதரியானாள்;உடன் பிறவாத் தங்கையானாள்.

அல்லியின் தளிர்க்கரங்கள் மெல்ல உயர்ந்து செந்தாமரையின் கண்களை நாடின; அதே சமயத்தில் செந்தாமரையின் விரல்களும்அல்லியின் விழிக்கரையில் ஊர்ந்தன.சொல்லி வைத்தாற் போன்று இருவர் விரல்களிலும் துயர்நீர் சுட்டது; அந்த வெம்மையில் தண்மை இருந்தது. பாசம் சுடுவது இல்லையல்லவா?

எழும்பூர் ரெயில் சந்திப்புக் கூடம்.

பதினாறுமடிப்புக்களாகச்சுருட்டிவைக்கப்பட்டிருந்தபத்து ரூபாய்த்தாளை அல்லி பிரித்தபோது, அவளுக்குச் சிரிக்கத்தான் தோன்றியது. புதுக்கருக்குக் குலையாத நூறு ரூபாய்த்தாள்களுடன் சொந்தங் கொண்டாடிய நாட்கள் அனைத்தும் அவளுக்குச் சொப்பனமாகவே தெரிந்தன. ‘பணம், லட்சியம், கனவு எல்லாமே வெறுங்கானல்தானா? இன்பத்தை ஆரம்பப் பள்ளியாக்கிக் கொண்டு உருவாகும் இவை அவ்வளவுக்கும் கடைசி முடிவு நிலை துன்பமும் கண்ணீருந்தானா?’ என்று அவள் மனம் மறுகினாள். சஞ்சலம் அவளதுமேனியை மருவிற்று. பிரயாணச் சீட்டுப் பெறும் வழிக்குத் தடம் பிரிந்தாள். தடம் மாறிய தருணம், சுவரொட்டி ஒன்று பளிச்சிட்டுத் தெரிந்தது. நோக்கினாள் கூத்த மதி விழித்தது; அம்பு விழிகள் மருண்டன. வண்ணப் படத்தின் நிலை பாவையை மருளச் செய்தது; சீதையைப் பழிகாரியாக்கிக் காட்டுக்கு அனுப்பி விட்ட கட்டத்தைச் சித்திரம் வழங்கியது. அல்லி நடித்த திரைப்படம் ஆயிற்றே? பழி சுமந்து பாசபந்தம் பறிபோய்ப் பிரியும் கட்டத்தில், சீதையாகஉருக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/171&oldid=1389289" இலிருந்து மீள்விக்கப்பட்டது