பக்கம்:ஆடும் தீபம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

ஆடும்


இருப்பினும், மாயவரம், அவளுக்கும்-மற்றவர்களுக்கும்-எல்லோருக்கும் உணர்வு புகுத்தியவாறு வந்தது. இறங்கவேண்டியவர்கள் பரபரப்போடு எழுந்தார்கள். அவர்களைவிட அதிகமான பரபரப்புடன் ஏற வேண்டியவர்கள் எதிரிட்டார்கள். எப்படியோ ஏற வேண்டியவர் கள் ஏறியும், இறங்கவேண்டியவர்கள் இறங்கியும் ஆன பிறகுகூட வண்டி அசைவற்று நின்றது. எல்லோருக்கும் பொறுமை இருக்குமா னால், எல்லாக் காரியங்களும் ஒழுங்காகவும், அமைதியாகவும், அழகாகவும் நிறைவுறும் என்பதை மனிதர்கள் இன்னும் கற்றுக்கொள்ள வில்லை என்பதற்கு ரயில்வே ஜங்ஷன்களே அருமையான உதாரணங்களாக அமையும்.

அத்தகைய பிரத்தியட்சப் பிரமாணங்களில் ஒன்றாகப் பணியாற்றிவிட்ட திருப்தியோடு விளங்கிய மாயவரத்தையும் பின்னுக்கு நிறுத்திவிட்டு முன்னேறியது.சென்னை செல்லும் வண்டித்தொடர். அல்லி இருந்த பெட்டியில் பழைய முகங்கள் சில இருந்தன. புது முகங்கள் நிறையவே தென்பட்டன.

விசாலப் பார்வையாய் சுழன்ற அவள் கண்களை, உறுத்தும் நோக்கினால் தொட்டன வேறு இரண்டு விழிகள். அப்பார்வையின் கூர்மை தாங்காத அல்லியின் கருவிழிகள் இமைத்திரை போர்த்தின. பின் சற்றே அதை நீக்கி அவனை ஆராய முயன்றன.

அவளைப் பார்த்துவிட்டுத் தன் கண்களை விலக்கிய இளைஞனின் தோற்றமே அவனை ஒரு போக்கிரி என்று விளம்பரப்படுத்திக்கொண்டிருந்தது. சிலிர்த்து நின்ற தலை முடியும், அரும்பு மீசையும். கனத்த புருவங்களுக்கு அடியில் சுழல் நெருப்புத் துண்டுகளாய் ஜொலித்த கண் களும், அவை வீசிய அலட்சிய நோக்கும், உதடுகளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/41&oldid=1298441" இலிருந்து மீள்விக்கப்பட்டது