பக்கம்:ஆடும் தீபம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீபம்

47


கையைப்பற்றிக் கொண்டாள். அவளோடு நெருங்கி நடந்தாள்.

‘அருணாசலம், இந்த வண்டியிலேதான் வாரீயா?’’ என்று ஒருவன் கேள்வி எழுப்பவும், அவன் நின்றான். அவளும் நின்றாள். ‘இது யாரு?’ என்று கேட்பதுபோல் அல்லி மீது பார்வை எறிந்தான்.

‘என் அக்கா மகள்!’ என்று கூசாது சொன்னான் அருணாசலம் .

அப்பொழுது தன் முகத்தில் படர்ந்த நாணச் சிவப்பை

மறைப்பதற்காக அல்லி தன் முகத்தை மிகவும் தாழ்த்தி நின்றாள்.

வாத்தியார் இந்த வண்டியில் வருவதாக எழுதியிருந்தார். அதுதான் நான்......’ என ஆரம்பித்த மற்றவன், அடேடே, அவங்க எல்லோருமே அதே வந்து விட்டாங்களே

என்று கூறி முன் நகர்ந்தான்.


ஒரு கோஷ்டி ஸ்டேஷன் படிக்கட்டுகளை விட்டு இறங்கி நின்று சுற்றுமுற்றும் பார்த்தது.அதில்மிடுக்கானதோற்றமுடைய ஆண்களும், அலங்காரவல்லிகள் நான்குபேரும் காணப்பட்டனர். அவர்களின் வாத்தியார் ஆடம்பர மாகத்தான் தோன்றினர்.

“அவர்தான் நடன ஆசிரியர் ராஜநாயகம். அவருடைய நடன கோஷ்டிதான் இது. நம்மோடு பேசியவன் அவரது சீடர்களில் ஒருவன். கோபிநாதன். இவனும் ஆடுவான்.’ என்று அருணாசலம் அல்லிக்கு அறிவித்தான். ‘வா, நாமும் வாத்தியாருக்கு ஒரு கும்பிடு போட்டு வைக்கலாம்.’’ என்று சொல்லி, அவளை அழைத்துக் கொண்டு அவர்கள் அருகே சென்றான் வணக்கம்’ என்றான்.

புன்னகை பூத்தபடி, அவனைப் பார்த்தார் ராஜநாயகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/48&oldid=1252855" இலிருந்து மீள்விக்கப்பட்டது