பக்கம்:ஆடும் தீபம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8 -------. -- ஆடும்

அவர் கண்கள் அல்லி மீது மேய்ந்தன. “உனக்குக் கல்யாணம் ஆகப் போவது பற்றி நமக்கு நீ சொல்லவே இல்லையே?’ என்று கேட்டார். பெருங் கனைப்பைச் சிரிப்பு என வினியோகித்தார் .

‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை, அண்ணா. இது என் அக்கா மகள் அல்லி. ‘’ என்றான் அருணாசலம். அவள் முகம் மாதுளம் பூவாய் மீண்டும் சிவந்தது. அவள் மனம் அரித்தது. உள்ளத்தில் தெளிவற்ற கலவரம்சிறிது படர்ந்தது. “எல்லோரும் வண்டியிலே ஏறுங்க..’ என்றார் வாத்தியார். அவரது பட்டாளம், அங்கு நின்ற வேன்’ ஒன்றில் ஏறி இடம் பிடித்தது. “நீயும் ஏறப்பா அருணாசலம். அல்லியும் ஏறலாமே!’ என்றார் அவர். அவர்களும் ஏறிக்கொண்டார்கள். வண்டி பறந்தது. அல்லிக்கு எல்லாமே புதுசாகவும்,புதிராகவும் இருந்தன. குழப்பமும் கலக்கமும் எழுந்தன.'பட்டணம் பட்டணம்’ என்று பெரிதாகக் கேள்விப்பட்டிருந்தாளே தவிர, அது இவ்வளவு பெரிதாக, பரபரப்பு மிக்கதாய், ஜன நெருக்கம் பெருத்ததாய், வேகமும் வேஷமும் நிறைந்ததாய் இருக்கும் என்று அவள் எண்ணியதேயில்லை. எண்ணி யிருக்கவும் அவளால் முடியாது. அருணாசலம் அவளைப் பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று காட்டினான். அவளும் சிறுமி பொம்மைக்கடையைப் பார்த்து ரசிப்பது போல் எல்லாக் காட்சிகளையும் கண்டு களித்தாள். இவ்வளவு பெரிய பட்டணத்தில் எப்படி வாழ்வது, என்ன செய்து பிழைப்பது என்ற பிரச்சினை ஏக்கமாய், கவலையாய் எழுந்து அவளை அச்சுறுத்தியது. தங்குவதற்கு நல்ல இடமும், செளகரியமான வேலையும் கிடைப்பது வரை அவள் நடனக் கோஷ்டியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/49&oldid=1291238" இலிருந்து மீள்விக்கப்பட்டது