பக்கம்:ஆடும் தீபம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீபம்

55


திடீரென்று அல்லி பட பட வென்று கைகளைக் கொட்டினாள். குளத்தில் முழுகி எழும் பெண்ணொருத்தி சற்றுத் தொலைவில் மலர்ந்திருந்த தாமரையைக் கொய்யமுடியாமல் திண்டாடுவது அவளுக்கு வியப்பாக இருந்தது. ஒரே பாய்ச்சலில் குளத்திலே குதித்து, ஒரு மலர் என்ன, கை நிறைய மலர்களைக் கொய்துவிட வேண்டும் என்கிற துடிப்பு அவள் கைதட்டலில் பிரதிபலித்தது.

அல்லி கனவு கண்டு விழித்தாள். வாசற் கதவைப் போய்த் திறந்ததும், ராஜநாயகம் தம் காவிப்பற்கள் தெரிய நகைத்தவாறு உள்ளே வந்து சேர்ந்தார்.

கோவிலின் சிற்பம் தன் இடம் விட்டுப் பெயர்ந்து வந்து தம் அருகில் நிற்பது போலிருந்தது ராஜநாயகத்துக்கு.

‘என்னம்மா, அல்லி! எப்படி இருக்கிறே? ஊரெல்லாம் பிடிச்சிருக்கா?’ என்று, அடக்கத்துடன் நிற்கும் அவளைப் பார்த்துக் கேட்டார் அவர்.

நிலத்தை நோக்கியிருந்த நீள் விழிகளை மேலும் உயர்த்தினாள் அல்லி.

“உட்காருங்க வாத்தியார் ஐயா! ஊரைப் பார்த்தா எல்லாமே புதுமையா இருக்கு, பட்டணத்திலே பிறந்த வங்களுக்குத் தரையிலே கால் பாவாதாமே?’ என்று குறும்பாகக் கேட்டுத் தனக்குள் சிரித்துக்கொண்டாள் அவள். ‘ஏன்? நாங்க எல்லாம் பிசாசா? நீ ஒண்ணு...!” என்று கூறிய ராஜநாயகம் அங்கு கிடந்த பெஞ்சியில் உட் கார்ந்தவாறு அல்லி மீது பார்வையைச் செலுத்தினார்.

வாயிற்கதவு லேசாகத் திறந்திருந்தது. பகல் பொழுதின் வெப்பம் சற்று தணிந்து, மாலைக்காற்று சுகமாக வீசிக் கொண்டிருந்தது. வாத்தியாரின் பார்வையும் பேச்சும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/56&oldid=1298451" இலிருந்து மீள்விக்கப்பட்டது