பக்கம்:ஆடும் தீபம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

ஆடும்


டிருந்த சிகரெட்டை உதட்டிலே சாய்த்துப் பொருத்திய வாறு அருணாசலம் கூறினான்.

என்னைப் போல ஒரு நாட்டியக்காரியா? அப்படி நான் அந்தக் கலையில் கரை கண்டு விட்டேனா, என்ன? இன்னும் நான் படிக்க வேண்டியது எவ்வளவோ உண்டே?” குழந்தைபோல தற் பெருமை எதுவும் இல்லாமல் அடக்க மாகப் பேசினாள் அல்லி,

அருணாசலம் தன் முன் சுழன்று செல்லும் சுருளைக் கவனித்தவாறு குறுநகை புரிந்தான்.

‘உனக்குத் தெரிந்தவரை போதும். தாளத்தைப் பற்றி அறியாதவர்கள் சினிமாவில் நாட்டியம் ஆடவந்து விடுகிறார்கள். உனக்கென்ன? அன்று ஒரு நாள் வெள்ளி யன்று ஆடினாயே, எதைக் கண்டு நீ இச்சை கொண்டாய்’ என்கிற பாடலுக்கு பாவம் அப்படியே ததும்பி நின்றதே உன் சிரிப்பிலும் கண் வீச்சிலும்! அது போதுமே!’’

அல்லி திகைப்புடன் அவனைப் பார்த்துக்கொண்டே, “நீங்கள் எவ்வளவு படித்திருக்கிறீர்கள்? உங்கள் சொந்த ஊர் எது? உங்களுடைய விருத்தாந்தம் தான் என்ன?” என்று வினவினாள். ‘ஊரென்ன, பெயரென்ன, சம்பாத்தியமென்ன என்று ஆரம்பித்து விட்டாயே? ஊரும் பெயரும்: தெரிந்தால் உன் காதலுக்கே கத்தரிக்கோல்போட்டு விடுவாயோ, சினிமா தணிக்கையாளர் மாதிரி?’ என்று கேட்டு கட

கட வென்று சிரித்தான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/65&oldid=1301602" இலிருந்து மீள்விக்கப்பட்டது