பக்கம்:ஆடும் தீபம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

ஆடும்

தென் மலைச் சந்தனம்

ஆடும் தீபம்!

சிந்தனையைத் தூண்டிவிடும் சிறப்புப்பெயர். ஈராறு உள்ளங்களிலும் பெருகிவரும் இன்பக்கற்பனைகள் ஒருமிக்கச் சங்கமிக்கும் எழிலாழி.

வாழ்க்கைத் தீபத்திலே கற்புநெறி காத்து, அன்பைப் பெருக்கி, பண்பை வளர்த்து, இல்லறத் தவத்திலே சிறப்புற வாழ்ந்து, எழில் மக்களை ஈன்று தன்னையும் தன் குடும்பத்துக்காக அர்ப்பணித்துக் கொள்ளும் சந்தனம்,பெண் தேய்வில் மணம்பெறும் தியாகப்பிறவி. துன்பம் அவளுக்குத் துணைச்சக்தி. இல்லற எல்லைக் கோட்டினுள் அடங்குகையில், பெண்மையின் தியாகம் நற்பயனுறுகிறது. இல்லறத்தின் புறத்தே நோக்குங்கால், அவள்தெருவில் எறியப்பட்ட மாணிக்கம் உடைமையில்லாத ஒரு பொருளைக் கைப்பற்றி உரிமையாக்கிக்கொள்வதும் அவசியமில்லையென்றால், அதை உமிழ்ந்து விடுவதும், இன்றையச் சமூகத்தில் சிலருக்குச் சர்வ சாதாரணமான காரியமாகிவிட்டது. ஆனால், சந்தனத்தின் தேய்வைப் பொருட்படுத்தாமல், மணத்தினை மட்டும் விரும்புகிறது உல்லாச உலகம்!

நீள் விசும்பும் நீலக்கடலும் இணையும் கோட்டினைக் குறிக்கோளாக்கி ஒருசுடர் பிரயாணம்செய்ய ஆரம்பித்து விட்டது. அதுவே அல்லிச் சுடர், தமிழ் மணம்தந்த சீதனச்சொத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/69&oldid=1301641" இலிருந்து மீள்விக்கப்பட்டது