பக்கம்:ஆடும் தீபம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீபம்

79


ளம் கண்ணீர் வடித்தது. ஒரு சந்தேகம்! இந்தப் பயல் எந்த ஆதாரத்தைக்கொண்டு அல்லியைத் தான் கல்யாணம் செய்துகொள்ளப்போகிறேன் என்று. ஜம்பம் பேசு கின்றான்? ஒருவேளை அவளே உடன் பட்டிருப்பாளோ? இருவரும் ஒரே ரயிலில் இறங்கினார்களே?...’ “அல்லி சம்மதித்து விட்டாளா?’ என்று மட்டுமே அழுத்தமாகக் கேட்டார் ராஜநாயகம். “சம்மதிப்பாள் என்ற நம்பிக்கை எனக்குண்டு அதே அழுத்தத்துடன் பதில் வந்தது. “சரி, நானே கேட்டுக்கொள்கிறேன். இனி நீ போகலாம்.’’ என்று கடுமையாக மொழிந்த ராஜநாயகம் மேலும் அங்கு உட்கார்ந்திருக்க விருப்பமற்றவராக எழுந்தார்.

“நான் வருகிறேன், வாத்தியாரே! நாளைக் காலை பத்தரை மணிக்கு வண்டியுடன் வருவேன். அல்லியைத் தயாராக இருக்கச் சொல்லுங்கள்,’ என்று மிடுக்குடன் கூறிய அருணாசலம் சரக் சரக்’ என பாதரட்சைகள் ஒலிக்க படிகளில் இறங்கித் தெருவின் ஜனத்திரளில் மறைந்தான் . வெற்றிலைப் பெட்டியை சடக்'கென்று அறைந்து மூடினார் ராஜநாயகம், அருணாசலத்தின் பேச்சோ அவர் இதயத்தில் அறைந்த மாதிரி இருந்தது.

“நாச்சியாரம்மா இலையைப் போடு; அல்லி எங்கே?” எனறு வினவியவாறே உள்ளே நுழைந்தார் ராஜநாயகம், நாச்சியாரம்மாள் இரண்டு இலைகளைப்போட்டு அருகில் தண்ணீரையும் எடுத்து வைத்தாள். ‘அல்லி மாடியில் படுத்திருக்குதுங்க, போய் சாப்பிடக் கூப்பிட்டேன்; நீ போ:பசியில்லை.ன்னு ஒரு மாதிரியாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/80&oldid=1302723" இலிருந்து மீள்விக்கப்பட்டது