பக்கம்:ஆடும் தீபம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

ஆடும்


பேசிடுச்சு!’ என்று நாச்சியாரம்மாள் கைகளைப் பிசைந்தவாறு கூறினாள்.

“ஓஹோ!’ என்று ராஜநாயகம் தடதடவென்று மாடிப் படிகளில் ஏறலானார். காலடி ஓசை சமீபித்ததும் அல்லி நிமிர்ந்து பார்த்தாள். கலங்கியிருந்த விழிகளை லேசாகப் புடவைத்தலைப்பால்ஒத்திக்கொண்டாள்.ராஜநாயகத்தை நோக்கிப் புன்னகை புரிய முயன்றதின் அடையாளமாக அதரங்கள் சற்றேபிரிந்தன. கருமுகிலினூடே பிறைநிலவு எட்டிப்பார்க்குமே, அதேபோல, பல்வரிசை மின்னி மறைந்தது.

என்னம்மா உடம்புக்கு? சாப்பாடு வேண்டாமென்றாயாமே?’’ என பரிவுடன் விசாரித்தபடியே அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தார் ராஜநாயகம். அவருக்குத் தெரியும்-பரிவு சாதிக்கும் காரியத்தை அதிகாரம் சாதிக்காது என்று. நைந்த உள்ளத்தில் பரிவுடன் கூடிய அமுதப் பேச்சுப் பரவியவுடன் மதகுச் சீப்பைத் திறந்ததும், அடைபட்டுக் கிடந்த அணைவெள்ளம் பாய்வது போல அவளது உணர்ச்சிகள் வெளிப்பட்டு விட்டன.

அருணாசலத்தின் மேல் அவள் கொண்டுள்ள அன்பே அவளைக் காட்டிக்கொடுத்து விட்டது.

பொறுமையுடன் அத்தனையையும் கேட்ட ராஜநாயகம் நீண்டதொரு பெருமூச்சு விட்டார்.

‘அருணாசலத்தை கட்டிக்க உனக்குச் சம்மதம்: அப்படித்தானே?” “ஆம்” என்ற பாவனையில் தலையைக் குனிந்து கொண்டாள் அல்லி, “சரிஅம்மா.முதலிலே எழுந்து சாப்பிடவா. உன் இஷ்டப்படியே ஆகட்டும்.அருணாசலம் உள்ளத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/81&oldid=1303457" இலிருந்து மீள்விக்கப்பட்டது