பக்கம்:ஆடும் தீபம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொறி ஐந்து :

இதயம் எனும்
எழில் விளக்கு

உலகத்தின் கண்களிலே அல்லி கண் மலர்ந்தாள். அருகில் நின்று கொண்டிருந்த டாக்டரின் கண்கள் அவளை இமைமூடாமல் பார்த்தது பார்த்தபடி இருந்தன.

 

'அம்மா அல்லி, நீ என் வயிற்றிலே பாலை வார்த்தாயம்மா?" என்று தம்மை மறந்து கூறினார் ராஜநாயகம். பிறக்காமல் பிறந்த பாசத்துக்கும் கண்’ இருக்கத்தானே செய்கிறது?. <div style="visibility:hidden; line-height:<2em;"> 

துவண்டு கீழே விழ இருந்த அல்லியைத் துணைக்கரம் கொடுத்துக் காத்தான் அருணாசலம். ஆனால் அந்த அரவணைப்பும் அன்புத் தாங்கலும், அவள் வாழ்வு முழுமைக்குமே உரித்தானதாய் இருக்கக் கூடியவை தானா? 'பெண் பேதையாக இருக்கும் வரை அவளுடன் வாழ், விழித்துக்கொண்டு விட்டால், விட்டுவிட்டுப் போய்விடு!' என்று யாரோ சொல்லிச் சென்ற வாக்கை மெய்ப்பிப்பது போலத்தான் ஆண்கள் இருப்பார்களோ?அருணாசலமும் அந்த வர்க்கத்தைச் சார்ந்தவன் தானோ? அல்லியைக் காரில் வைத்துக் கொண்டு ராஜநாயகத்திடம்வந்தான் அருணாசலம். அவன் மட்டும் வரவில்லை; கூட, சிங்கப்பூரான் என்று அழைக்கப்படுகின்ற சாத்தையாவும் வந்தான். மயக்கம் அடைந்து விழுந்தாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/88&oldid=1306795" இலிருந்து மீள்விக்கப்பட்டது