பக்கம்:ஆடும் தீபம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

ஆடும்


யது. ஆகவே, “நான் இவளைத்தான் கட்டிக்கப் போறேன், சாத்தையா!’ என்று மட்டுமே பதில் கூறினான் அருணாசலம்.

“சரிதான், உங்க அப்பாவும் அம்மாவும் சம்மதிச்சிட்டாங்களா?

என்னைப்பற்றித்தான் தெரியுமே சாத்தையா! முன்னாளைய அருணாசலமேதான் நான்; கிராமத்திலே கட்டிப் போட்டாப்போல் இருக்கப் பிடிக்கலை. இப்படித்தான் நினைத்த இடத்திற்குப் போய்க்கொண்டிருக்கேன் . நான் அல்லியை ரெயிலிலே பார்த்தேன். இரண்டு பேருக்குள்ளும் ஒரு பிடிப்பு ஏற்பட்டுப்போச்சு. அப்பாவுக்கு விஷயத்தை எழுதினேன். நான் எப்படியாவது உருப்பிட்டு இருந்தாப்போதும்; என்கிறது அவர்கள் நினைப்பு, சம்மதம் தெரிவித்து விட்டாங்க!”

‘அல்லியைப் பாத்தா, சம்மதிச்சிருக்கவே மாட்டாங்க!'” என்றான் சாத்தையா,

ஏன்!”

அருணாசலத்தின் கண்கள் ஆச்சரியமாக விரிந்தன.

“அவுங்க உலக அனுபவம் உள்ளவங்க; அல்லியைப் பத்தி உன்னைவிடத் தெரிஞ்சுக்குவாங்க!’

அருணாசலத்தின் மனத்தில் இடி இடித்தது.

‘என்ன சொல்கிறாய், சாத்தையா?’ என்று கேட்டான் அவன்.

‘'நான் சொல்றது. இருக்கட்டும். அல்லி தன்னைப் பத்தி என்ன சொன்னாள்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/91&oldid=1310534" இலிருந்து மீள்விக்கப்பட்டது