பக்கம்:ஆடும் தீபம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தீபம்

96


இத்தனை நாளும் குழந்தைத் தனமாய் இருந்தேன். இனிமே அப்படி இருக்கவே மாட்டேன், என்று அதே சூட்டுடன் கூறினான் அருணாசலம்.

  • உன்னுடைய இந்த தில்லுமுல்லுச் சமாச்சாரம் எனக்குத் தெரியாதா அருணாசலம்? மலருக்கு மலர் தாவும்வண்டுபோலத்தான் நீ. இதையெல்லாம் தெரிந்து கொண்டுதான் முன்னமேயே நான் இந்த சம்பந்தத்தைத் தடுத்தேன்.அப்பொழுது நீ பிடிவாதம் பிடித்தாய். இப்பொழுது அதே உன் வாய்தான் மாட்டேன்’ என்கிறது அல்லியின் மனசு இந்தப்பேரிடியைத் தாங்குமா? அவள் உன்னுடைய பயங்கரமான முடிவைக் கேட்கச் சகிப்பாளா? அல்லிப்பூ வாடிவிடுமே, அருணாசலம்?'’

ராஜநாயகத்தின் விழிகள் கலங்கி வந்தன.

அவளுக்கும் எனக்கும் இனிமே ஒரு தொடர்புமில்லை!” என்று தீர்மானத்துடன் கூறி நிறுத்தினான் அருணாசலம் :

“எப்பொழுதிலிருந்து இந்த முடிவுக்கு வந்தாய்’

கொஞ்சநேரம்தான் ஆயிற்று’ என்று கடுகடுத்த குரலில் அருணாசலம் சொன்னான்.

காரணம்...?’’ ‘இப்போது என்னை ஒன்றும் கேட்கக்கூடாது, வாத்தியாரையா. அப்புறம் நம் சினேகம் முறிஞ்சு போகும்!”

‘இப்போ மட்டும் ஒட்டிக்கொண்டிருக்கிறதாக எண் ணமோ? வாத்தியாரையா என்று கூப்பிட்ட வாயைக் கழுவிவிடு அருணாசலம். அல்லியை வேண்டாம் என்று சொன்னபின் உனக்கும் எனக்கும் என்ன இருக்கிறது?”

“வாத்தியாரையா!’ “அருணாசலம், திகைப்பாயிருக்கிறதோ'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/96&oldid=1311162" இலிருந்து மீள்விக்கப்பட்டது