இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்
101
ஒவியமாக வடித்து. எடுத்திருக்கும் ஆனந்த விகடன் சித்ரீகர் சில்பி' அவனைச் சடையாண்டியாகவே காட்டுகிறார். அவிழ்ந்து தொங்கும் சடை அவன் தலையை அலங்கரிக்கிறது என்பதை, அவர் எழுதியிருக்கும் படத்தில் காணலாம். சரி, இனிமேலாவது அவன் நம்மை மொட்டை அடிக்கும் மொட்டை ஆண்டி அல்ல, நல்ல சடையோடு கோலாகலமாகக் காட்சி தருபவனே என்று அறியலாம் அல்லவா.
வேண்டுவார் வேண்டுவன எல்லாம் தரும் இந்த ஞானப் பழத்தை, இனி நெஞ்சில் மாத்திரம் அல்லாமல் பூசை அறையிலும் வைத்து, வந்தித்துச் சுவைக்க தயக்கம் ஒன்றும் வேண்டாம் தானே!