பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கொடியடியில் மடக்கொடி

யோத்தி நகரிலிருந்து மிதிலைக்கு, அங்கு நடக்க இருக்கும் சீதா கல்யாணத்தைக் காண ஒரு கூட்டம் புறப்படுகிறது. அக்கூட்டத்தில் ஆண்களும், பெண்களும், சக்கரவர்த்தி தசரதனையும், அவனது தேவியரையும் தொடர்ந்து செல்கிறார்கள். தங்கள் அபிமானத்திற்குரிய சக்கரவர்த்தித் திருமகனான இராமன் அல்லவா சீதையை மணம் முடிக்கப் போகிறான் என்று குதூகலித்த உள்ளத்துடன் நடக்கிறார்கள் எல்லோரும். வழியெல்லாம் ஒரே கும்மாளம். பூக்கொய்கிறார் சிலர். நீர் விளையாடுகிறார் சிலர். ஏன், உண்டே மகிழ்கிறார் பலர்.

இப்படி, கூட்டம் சென்று கொண்டே இருக்கிறது. இக்கூட்டத்தைக் காண்கிறான் கவிச்சக்கரவர்த்தி கம்பன். அவனது கற்பனையில் எத்தனை எத்தனையோ காட்சிகள். அந்தக் காட்சிகளை வைத்துக்கொண்டே பலபல உண்மைகளை மிக எளிதாகக் கூறிவிடுகிறான் அவன். அப்படி, அவன் கண்ட காட்சியில் ஒன்று, கற்பனையில் கண்ட காட்சிதான், கவிதை உருவில் வெளிவருகிறது.

நஞ்சினும் கொடிய நாட்டம்
அமுதினும் நயந்து நோக்கி
கெஞ்சவே கமலக் கையால்
தீண்டலும், நீண்ட கொம்பர்
தம் சிலம்பு அடியில் மென் பூச்
சொரிந்து உடன் தாழ்ந்த எனின்